அம்பாறை கனகர் கிராமத்தில் 180நாளுக்கு மேலாக தொடரும் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரும் மக்கள் போராட்டம்

74

 

கிழக்கு மாகாணம் அம்பாறை பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான சாலையில் ஊறணி என்னும் இடத்தில் கனகர் கிராமம் உள்ளது.கிராத்தில் அரைநூற்றாண்டு மேலாக வசித்தவந்த தங்கள் பூர்வீககாணிகளை விடுவிக்கக்கோரி கடந்த 180நாட்களுக்கு மேலாக பேராட்டத்தில் மக்கள் ஈடுபடுகின்றனர்.

அங்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்ற மக்கள் மனித அபிவிருத்தி தாபனம் என்ற அமைப்பின் பிரதிநிதிகள் அம்மக்களிடம் கலந்துரையாடியுள்ளனர்.அப்போது தமது காணிகளை விடுவிக்கப்படால் தாமதப்படுத்தபடுவது குறித்த கவலை வெளியிட்டுள்ளனர்.

இதே வேளை இந்த மக்களின் காணிகளை விடுவிக்காமல் இழுத்தடிப்பது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடப்போவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

SHARE