இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து யாழ்ப்பாணத்தை ஆராய்கின்றார் ரணில்

260

 

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்கின்றார்.

முன்னதாக கோப்பாய் பிரதேச செயலக புதிய கட்டிடம் யாழ் போதனா வைத்தியசாலை திடீர் விபத்து சிகிச்சை பிரிவு என்பவற்றை திறந்துவைக்கும் ரணில்
காங்கேசன்துறை துறைமுகம் பலாலி விமானநிலையம் மற்றும் வீட்டுத்திட்டம் வீடமைப்பு தொடர்பான விடயங்களை நேரில் ஆராய்வதுடன் யாழ் மாவட்ட செயலகத்தில் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை நடத்துகின்றார்.

ரணிலின் இந்த பயணத்தின்போது அமைச்சர்களான விஜயகலா மகேஸ்வரன் ரிசாட்பதியுதீன் அர்ஜுன ரணதுங்கா அகிலவிராஜ் காரியவசம் சாகல ரட்ணாயக்கா உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

SHARE