மார்ச்19 மட்டக்களப்பு தமிழினநீதி கோரும் போராட்டத்திற்கு திருமலையில் துண்டுப்பிரசுரங்கள்

225

எதிர்வரும்19ம் நாள் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து காந்திபூங்காவரை தமிழின நீதி கோரி மாபெரும் பேரணிக்கும் கடையடைப்புக்கும் மட்டக்களப்பு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அழைப்பு விடுத்துள்ள நிலையில் அதற்கு ஆதரவு திரட்டும் பணிகள் தீவிரம் பெற்றுள்ளன.

இன்று மட்டக்களப்பு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் முகமாக திருமலை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடும் துண்டுப்பிரசுரங்களை வர்த்தக நிறுவனங்கள் மக்கள் கூடும் இடங்களில் வழங்குவதை காணமுடிந்தது.

SHARE