அவுஸ்ரேலிய அணிக்கு வெற்றியிலக்காக 281 ஓட்டங்கள்!

52

பாகிஸ்தான், அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் அவுஸ்ரேலிய அணிக்கு வெற்றியிலக்காக 281 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 280 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் ஹரிஸ் சொஹைல் 101 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில் 281 என்ற வெற்றியிலக்கினை நோக்கி இன்னும் சற்றுநேரத்தில் அவுஸ்ரேலிய அணி களமிறங்கவுள்ளது.

SHARE