தோற்கடிக்கப்பட்டது ஐ.எஸ் அமைப்பு-சிரிய இராணுவம்

70

சிரிய யுத்த வெற்றியை சிரிய மற்றும் அமெரிக்க ஆதரவு படைகள் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

கடந்த சிலவாரங்களாக படையினரால் நடத்தப்பட்ட கடும் தாக்குதலில் ஐ.எஸ் போராளிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் சிரிய இராணுவம் இன்று (சனிக்கிழமை) தமது வெற்றியை அறிவித்துள்ளது.

சிரியாவின் பல்வேறு பகுதிகளையும் ஆக்கிரமித்திருந்த ஐ.எஸ் போராளிகள், படைகளிடம் தோற்று பல்வேறு பகுதியை இழந்து இறுதியாக கிழக்கு சிரியாவின் பாக்ஹுஸ் பகுதியை மாத்திரம் தம் வசம் வைத்திருந்தனர்.

இந்நிலையில் கடும் தாக்குதல் மூலம் பாக்ஹுஸ் பகுதியையும் படைகள் வென்றுள்ளது. அப்பகுதியில் இருந்த போராளிகள் பலர் உயிரிழந்துள்ளதோடு ஆயிரக்கணக்கானோர் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர்.

இதேவேளை பாக்ஹுஸ் பகுதிக்கு விடுதலை கிடைத்திருப்பதாக சிரிய இராணுவத்தின் ஊடக பேச்சாளர் முஸ்தபா பாலி தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு சிரியாவில் தொடங்கிய யுத்தம் போராளிகள், இராணுவத்தினர் உட்பட இலட்சக்கணக்கானோரைக் காவுகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE