தெற்கில் காடுகளை அழிப்பவர்கள், வில்பத்து குறித்து பேசுவதாக குற்றச்சாட்டு!

57

தெற்கில் காடுகளை அழிப்பவர்கள், வில்பத்து குறித்து பேசுகின்றனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தெற்கில் காடுகளை அழிப்பவர்கள், வில்பத்து குறித்து பேசுகின்றனர்.

நாம் வனப்பகுதிகள் அழிக்கப்படுவதை கடுமையாக எதிர்க்கின்றோம். அதேபோன்று இனவாதத்தையும் எதிர்க்கின்றோம்’ என தெரிவித்துள்ளார்.

SHARE