தலைமன்னாரில் கைப்பற்றப்பட்ட 78கிலோ பீடி இலைகள் சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்

37
தலைமன்னாரில் கைப்பற்றப்பட்ட 78கிலோ பீடி இலைகள் சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்
தலைமன்னார் பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் ஆதாம்பாலம் 5ஆம் திட்டியில் நேற்று 78கிலோ நிறையுடைய பீடி இலை பொதியினைக் கைப்பற்றியுள்ளதாகவும் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுவிட்டதாகவும் தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று தலைமன்னார் பொலிசாருக்குக்கிடைத்த தகவல் அடிப்படையில் ஆதாம்பாலத்தின் 5ஆம் திட்டியில் கைவிடப்பட்ட நிலையில் பீடி இலை பொதிகள் காணப்பட்டுள்ளது. இதன் நிறை 78கிலோ கிராம்முடையதாக காணப்படுகின்றது. சட்ட விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு படகில் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
SHARE