ஹோலிக்கு தொடரும் சோகம் – ஹைதராபாத் அணி 118 ஓட்டங்களால் அபார வெற்றி

69

பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 118 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல். தொடரின் 11 ஆவது லீக் போட்டியில் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி அதன்படி முதலில் களமிறங்கிய ஜொனி பரிஸ்டோவ்வின் அதிரடி சதம் மற்றும் டேவிட் வோர்னரின் சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரமே இழந்து 231 ஓட்டங்களை பெற்றது.

அவ்வணி சார்பாக ஜொனி பரிஸ்டோவ் 114 ஓட்டங்களையும் டேவிட் வோர்னர் அட்டமிழக்கமல் 100 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் யூசுவெந்திர சஹால் விக்கெட்டை வீழ்த்தினார். இந்நிலையில் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணி 232 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடியது.

இருப்பினும் ஹைதராபாத் அணி வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இறுதியில் ஹைதராபாத் அணி ஓட்டங்களால் அபரவெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

சலஞ்சர்ஸ் அணி சார்பாக கொலின் டி கிராண்ட்ஹோம் 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் மொஹமட் நபி 4 விக்கெட்களையும் சந்தீப் சர்மா 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

SHARE