உலகில் முதல் 5ஜி அமைப்பு தென் கொரியாவில் அறிமுகம்

65

உலகில் முதல் முறையாக நாடு முழுவதும் 5ஜி சேவையை தென் கொரியா வழங்க ஆரம்பித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை அங்கு 5ஜி சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த புதன்கிழமை இரவே தென் கொரியா முழுவதும் 5ஜி சேவை ஆரம்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

எஸ்.கே டெலிகொம், கே.டி எல்.ஜி யூபிளஸ் ஆகிய நிறுவனங்கள் இச்சேவையை வழங்குகின்றன. அமெரிக்காவின் வெரிசோன் நிறுவனம், 5ஜி சேவையை அந்நாட்டில் ஆரம்பித்ததை அடுத்தே, தென் கொரியா அவசர அவசரமாக இரவில் இச்சேவையை ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

 ஒலிம்பிக் பனிச்சறுக்கில் தங்கம் வென்ற வீராங்கனையான கிம் யுனா மற்றும் எக்சோ பேண்ட் இசைக்குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் உலகின் முதல் 5ஜி வாடிக்கையாளர்களாக இருப்பார்கள் என எஸ்.கே. டெலிகொம் கூறியுள்ளது.

இந்தப் புதிய கட்டமைப்பு அதிவிரைவுத் தகவல் பரிமாற்றத்தை வழங்கும். மக்களின் அன்றாட வாழ்க்கையைப் புதிய தொழில்நுட்பம் வெகுவாக மேம்படுத்தும்.

புதிய கைபேசிக் கட்டமைப்பு தென் கொரியாவின் பொருளாதாரத்திலும் உந்துதலாக விளங்கும் என்று கருதப்படுகிறது.

SHARE