நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் மரணம்!

81

தமிழ் திரைப்பட நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷ் (வயது 46) மாரடைப்பால்  மரணமடைந்தார்.

இன்று (சனிக்கிழமை) இராமநாதபுரத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பிய ரித்தீஷுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, உறவினர்கள் அவரை  மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர்.

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் ஜே.கே.ரித்தீஷ், ‘கானல் நீர்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் ‘நாயகன்’, ‘பெண்சிங்கம்’ , ‘எல்கேஜி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பிரச்சாரம் செய்வதற்காக இராமநாதபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தேர்தல் பணிகளை தற்போது மேற்கொண்டு வந்துள்ளார்.

2009 லோக்சபா தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக பதவி வகித்தார். 2014ஆம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். அத்துடன், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முக்கிய பதவி வகித்து வந்தார்.

ரித்தீஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘எல்.கே.ஜி.’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அதுவே இவரது கடைசி படமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE