உலகின் மிகப்பெரிய விமானம் பயணத்தை ஆரம்பித்தது

125

உலகின் மிகப்பெரிய விமானம் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்பும் வகையில், Stratolaunch எனும் நிறுவனத்தால் இந்த விமானம் உருவாக்கப்பட்டது.

அதாவது பூமியிலிருந்து 10 கிலோமீற்றர் (6.2 மைல்கள்) தூரத்திற்கு செயற்கை கோள்களை சுமந்துசெல்லும். பின்னர், அங்கிருந்து விண்வெளிக்கு அனுப்பப்படும்.

விமானத்தின் இறக்கையானது 385 அடி நீளம் (117 மீற்றர்) கொண்டது. அதாவது அமெரிக்க காற்பந்து திடலின் நீளத்திற்கு சமமானது. ஆறு இயந்திரங்களை கொண்டமைந்த இந்த விமானம் மணிக்கு 170 மைல்கள் பறக்கும் வல்லமை கொண்டது. முதலாவது பயணத்தில் 15,000 (47,572 மீற்றர்) அடிகளுக்கு எவ்வித பிரச்சினையும் இன்றி பறந்துள்ளது.

குறித்த விமானத்தின் பயணம் மிகவும் சிறப்பாக அமைந்திருந்ததென விமானி ஈவன் தோமஸ் தெரிவித்துள்ளார். முன்கூட்டியே கணிக்கப்பட்டதைப் போன்று விமானம் சிறப்பாக பறந்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.

பூமியிலிருந்து நேரடியாக செயற்கை கோள்களைப் செலுத்துவதைவிட, இந்த விமானத்தின் மூலம் குறைந்த செலவில் செயற்கை கோள்களை செலுத்தலாமென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE