வீதியில் அழுத சிறுமியின் ஒளிப்படத்திற்கு சர்வதேச விருது!

53

அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் சிறுமி அழுது கொண்டிருக்கும் ஒளிப்படத்திற்கு உலக பத்திரிக்கை ஒளிப்பட விருது கிடைத்துள்ளது.

கடந்த வருடம் ஜுன் மாதம் 12ஆம் திகதி, மெக்ஸிகோ – அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக அமெரிக்க எல்லைப் பாதுகாப்புபடை வீரர்கள் சிலரைக் கைது செய்தனர்.

கைதான பெண் ஒருவர் தன் மகளை அங்கேயே விட்டுவிட்டு அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களின் வாகனத்தில் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதன் பின்னர் அக்குழந்தை இரவு முழுவதும் அதே இடத்தில் அழுது கொண்டு இருந்தது. இக்காட்சியை அந்நாட்டு ஒளிப்பட கலைஞர் ஜோன் தன் கேமராவில் படமாக்கினார்.

உலகெங்கிலுமிருந்து சுமார் 4738 கலைஞர்கள் தாங்கள் எடுத்திருந்த 78.801 ஒளிப்படங்களை உலக பத்திரிக்கை ஒளிப்பட விருதுக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் ஜோன் எடுத்த சிறுமி யனீலா அழுவது போன்றுள்ள இந்த ஒளிப்படம் உலக பத்திரிக்கை ஒளிப்பட விருதை வென்றுள்ளது.

SHARE