குடிநீர் விநியோகம்நிறுத்தப்பட்டுள்ள கிளிநொச்சி பாரதிபுரம்

54

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் குடிநீர் விநியோகம் சீராக இல்லாமையால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஐந்து வருட காலமாக இப்பகுதியில் விநியோகிக்கப்பட்ட குடிநீர், கடந்த நவம்பர் மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சுமார் 1000 குடும்பங்கள் வாழும் குறித்த கிராமத்தில் குடிப்பதற்கு உகந்த நீரில்லை. இப்பகுதியில் நீர்வழங்கல் அதிகார சபையினரால் குடிநீர் விநியோகிக்கப்பட்ட போதும், தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதால் பணம் கொடுத்து நீரை பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், அதற்கான வசதி இல்லாத காரணத்தால் இம்மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

தமக்கான குடிநீர் பிரச்சினை தொடர்பாக முறையிட அதிகாரிகளை நாடிச் சென்ற போதும், அவர்கள் இல்லையென அலுவலகத்திலுள்ளோர் தெரிவிப்பதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தேர்தல் காலத்தில் மக்களை நாடி வந்து வாக்குகளைப் பெற்று, பின்னர் தாம் தேடிச் செல்லும்போது அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர். இதனை தவிர்த்து, தமது அடிப்படை தேவையான நீரை பழைய முறைப்படி மீளவும் பெற்றுத்தர வேண்டுமென இம்மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

எமது பிரதேசத்தில் காணப்படும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

SHARE