உன்னதமான தலைவனோடு வாழ்ந்த நாம் எப்படி வாழ்கின்றோம்-மாறனின் அனுபவப்பகிர்வு

575

உலகப்புகழ் பெற்ற ஒரு உன்னதமான தலைவனோடு வாழ்ந்த நாம்

மக்களையும்இ போராளிகளையும் உண்மையாக நேசித்த தலைவனோடு வாழ்ந்த நாம்

சாதாரண ஒரு போராளியைக் கூட உண்மையாக நேசித்த ஒரு தலைவனோடு வாழ்ந்த நாம்
எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ?

தலைவன் காட்டிய வழியில்தான் தலைவரோடு வாழ்ந்த நாம் வாழ்கிறோமா ? உண்மையில் அப்படித்தான் வாழ்கிறோம் என்று மனட்சாட்சியைத் தொட்டுச் சொல்லமுடியுமா ?

தலைவரையும் மாவீரர்களையும் வியாபாரப் பொருளாக்கிவிட்டோமே ! பல வியாபாரக் கடைகள் திறப்பது போல் பல கட்சிகள் பல இயக்கங்கள் பல தலைவர்கள் உருவாக்கி விட்டோமே !

போராளிகள் இல்லாதவர்கள் எப்படியும் நடந்து கொள்ளலாம். போராளிக ளான நாம் அப்படி நடந்து கொள்ளலாமா ?

தலைவர் இப்படித்தான் நடந்து கொண்டாரா ? அல்லது எம்மை அப்படி நடந்து கொள்ளச் சொன்னாரா?

தலைவர் ஒன்று பட்டு செயல்படுவதையே எப்போதும் விரும்பினார் 1984ம் ஆண்டு ரெலோ. ஈ பி ஆர் எல் எப் ஈரோஸ் அனைவரையும் இணைத்து ஈழ தேசிய விடுதலை முன்னணியை ஆரம்பிபதற்கு உதவினார். 2001ம் ஆண்டு மேலும் அனைவரையும் இணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை என்ற அமைப்பை அமைப்பதற்கு உதவினார். இது மட்டுமன்றி மாவட்ட மட்டத்திலும் இதை நடைமுறைப்படுத்த ஊக்குவித்தார் 1984 ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் அன்றைய அரசியல் பொறுப்பாளாராக இருந்த மூர்த்தி தலைமையில். 9 இயக்கத்தினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினா ர்கள். ஆறு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் கையொப்பம் இடுவதற்கென மூன்று கூட்டங்கள் நடத்தப்பட்டன. அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்களில் மூர்த்தியின் வேண்டுகோளை ஏற்று அன்றைய மாவட்டத் தளபதி மாத்தையா கூட்டத்திலையே வந்து கையொப்பமிட்டார். ஏனைய வர்கள் தங்கள் தலைமையோடு கதைத்து விட்டு கையொப்பமிடுவாதாகச் சொன்னார்கள். அதற்காக வைக்கப்பபட்ட மூன்று கூட்டத்தில் எல் ரி ரி ஈ ஈ பி ஆர் எல் எப் ஈரோஸ் ஆகிய மூன்று இயக்கத்தினர் மாத்திரமே கலந்து கொண்டனர். ஆயினும் இவ் இரு இயக்கத்தினரும் ஏணைய வர்கள் வைத்தால்தான் தாம் வைப்போம் எனக் கூறி கையொப்பம் வைக்காமலே சென்றுவிட்டனர். ‘ஒற்றுமை செயலில் இருக்கவேண்டும் பேச்சில் அல்ல’ என்ற தலைவரின் கூற்றுக்கு சரியாக நடைமுறையில் பதிலளித் திருந்தனர் ஏணைய இயக்கத்தினர்.

பிரிந்து நின்று எதையும் சாதிக்கமுடியாது என்பது உண்மையாக இருக்கும் போதுஇ ஏன் நாம் பிரிந்து நிக்கிறோம் ? இணையதளம் வைத்திருப்பவன் ஒரு இயக்கம் ! நன்றாகப் பேசத்தெரிந்தவன் ஒரு இயக்கம் ! தலைமை க்கு ஆசைப் படுவன் ஒரு இயக்கம் ! சிறிது காலம் இயக்கத்தில் இருந்த வன் கூட ஒரு இயக்கம் ! இப்படி எண்ணற்ற இயக்கங்கள் ஆரம்பித்து விட்டோமே ! இதைத்தான் எதிரியும் விரும்புகிறான். இதை உக்கிவிப் பதற்காக எதிரி பெரும் தொகையான பணங்கள் பலருக்கு இரகசியமாக கொடுத்துக் கொண்டிருக்கிறான். இச் செயற்பாடுகள் மூலம் எம் மக்களுக்கு சேவை செய்ய முடியுமா ? இதன் மூலம் எதிரிக்கு மட்டுமே சேவை செய்ய முடியும்.
இதற்காகவா ? எம் மாவீரச் செல்வங்கள் தங்கள் உயிர்களை அற்பணி த்தார்கள்.

எண்ணற்ற மாவீரர்களை எமது கையாலையே புதைத்தோமே ! நாம் இப்படி நடந்துகொள்ளலாமா ! இதற்காகவா மாவீரர்கள் தங்கள் உயிர்களை மகிழ்வுடன் அற்பணித்தார்கள் ? ஒன்று இரண்டு மாவீரர்களா ! 45ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரச் செல்வங்கள் உயிர்களை அற்பணித்தார்களே ! இவர்களின் கனவு இதுதானா ?
எமது தலைவனும் மாவீரர்களும் உறவுகளைக் கடந்தவர்கள் சாதி மதங்களைக் கடந்தவர்கள்இ மக்களின் சுதந்திரமான வாழ்வு ஒன்றே குறிகோளாகக் கொண்டவர்கள். இப் புனிதர்களின் கனவைக் குழி தோண்டிப் புதைக்கலாமா ? மனச்சாட்சி உங்ககளை உறுத்தவில்லையா? இன்று ஆயுதம் இல்லாமலே அரசியல் செய்யக்கூடிய சூழ்நிலை இருந்தும் முன்னாள் போராளிகளான நாம் துரோகிகளுக்கு அரசியல் செய்ய வழி அமைத்துக் கொடுத்திருக்கிறோம். நாம் ஒன்றுபட்டிருந்தால் துரோகிகள் அரசியல் நடாத்தி இருப்பார்களா ?

ஆயுத நடவடிக்கைகள் வேறு அரசியல் நடவடிக்கைகள் வேறு. இரண்டும் வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்டவை. ஆயுத நடவடிக்கைகள் மாதிரி அரசியல் நடவடிக்கைகள் செய்ய முடியாது. இதைத் தலைவர் தெளிவாக வரையறுத்திருந்தார். ‘ அரசியல் வேலை செய்பவன் மக்களின் சேவகன் ‘ ‘ மக்களின் தேவைகளில் இருந்தே அரசியல் வேலை தொடங்க வேண்டும் ‘ (1992 ம் ஆண்டு அரசியல் பயிற்சி பள்ளியில் தலைவர் ஆற்றிய உரையிலிருந்து ) இது இயக்கத்தில் அரசியல் வேலை செய்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். இதில் அனுபவ முள்ளவர்கள் இன்னமும் வெளிநாடுகளில் எதுவும் செய்யமுடியாத சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இன்று ஆயுதப்போராட்டம் நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை. அதற்காக நாம் வாய் பேசாது மௌனியாக இருந்து விட முடியுமா ? இன்று எமது விடயம் உலகெங்கும் பேசப்படும் பொருளாக மாறிவிட்டது. அரசியல் செய்யக்கூடிய சூழ்நிலை பிரகாசமாகவே உள்ளன. உலகம் எம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. உலகம் திரும்பிப் பார்க்காத சூழ்நிலையிலும் சிங்கள அரசின் கொடூரமான அடக்குமுறை மத்தியிலும் கொடூரத் தாக்குதல்கள் மத்தியிலும் தந்தை செல்வா சளைக்காது பல அகிம்சைப் போராட்டங்களை நடாத்தினார்.

ஆயிரக்கணக்கான உயிர்களை அற்பணித்த அற்பணிக்கத் தயாராக இருந்த நாம் இன்னமும் உயிரோடு இருக்கிறோமே ! ஏன் எம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. அரசியல் செய்யக்கூடிய சூழ்நிலை எமக்குச் சாதகமாக இருந்தும் நாம் ‘ பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது போல்’ தாயகத்திலும் புலத்திலும் இருந்துகொண்டு அரசியல் வியாபாரக் கடைகள் நடாத்திக்கொண்டிருக்கிறோம்.

அற்பணிக்கத் தயாராக இருந்த நாம் இன்னமும் உயிரோடு இருக்கிறோமே ! ஏன் எம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. அரசியல் செய்யக்கூடிய சூழ்நிலை எமக்குச் சாதகமாக இருந்தும் நாம் ‘ பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது போல்’ தாயகத்திலும்இ புலத்திலும் இருந்துகொண்டு அரசியல் வியாபாரக் கடைகள் நடாத்திக்கொண்டிருக்கிறோம்.

ஆயுதப்போராட்டம் மௌனித்து பத்து வருடங்களாகியும் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் ? சுயமாகப் போராடும் மக்களோடு கூட சேர்ந்து போராடாது உள்ளோம். நாம் இன்று பல துண்டுகளாகப் பிரிந்து நின்று ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு ஒருவருக் கொருவர் சேறு பூசிக்கொண்டிருக்கிறோம். அது மட்டுமன்றி எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் வழி விட்டு எதிரியின் நிகழ்ச்சி நிரலில் திறமையாக வேலை செய்து கொண்டிருக்கிறோம். எதிரி எமது கைகளாலையே எமது கண்களை குத்தும் செயலினை திறம்பட செய்து கொண்டிருக்கிறான்.

தலைவரோடு ஒன்றாக வேலை செய்த அனைவரையும் துரத்திவிட்டு ஆமாம் சாமி போடுவபர்களை மட்டும் வைத்துக்கொண்டு வேலை செய்யும் படி தலைவர் சொன்னாரா ?

முள்ளிவாய்க்களுக்குப் பின் அடையாளம் உள்ள அமைப்பாக எமது வெளிநாட்டுக் கிளையினர் மட்டுமே இருந்தனர். தளபதி கிட்டுவைப் போல் ஆளுமை உள்ளவர்கள் இல்லாததால் ஒரு சரியான அரசியல் அமைப்பை இவர்களால் உருவாக்க முடியாது பொய் விட்டது. அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் குறிப்பிட்டது போல் உள்ளுரில் பிரிந்து நிற்பது போல் புலம்பெயர் நாடுகளிலும் பிரிந்து நின்று வேலை செய்து கொண்டிரு க்கிறோம். சர்வதேச நிறுவனமான ஐ நாவிலும் வெட்கக் கேடான வகையில் பிரிந்து நிக்கிறோம். பிரிந்து நின்று எதுவும் செய்யமுடியாது என இவர்களுக்கு நன்றாகத் தெரியும் இதுவும் சிங்கள அரசுக்குச் சேவகம் செய்யும் ஒரு முறையேயாகும். பிரிந்து நின்று ஒரு போதும் ஒன்றும் சாதிக்க முடியாது. ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்று சேர்ந்து ஒரே குரலாக வேலை செய்தால் மட்டுமே ஏதாவது ஒன்றைச் சாதிக்க முடியும்.

எமது துர்ப்பாய்க்கியம் பல புத்தியீவிகளும் இத் துரோகத்துக்கு துணை போய்க் கொண்டிருக்கிறார்கள். ‘நேர்மையோடு திறமையும் இணைந் திருக்க வேண்டும்’ இல்லை எனில் திறமையுள்ளவன் ஏமாற்றுக்காரனா கவும் எதிரிக்கு துணை போறவனாக மாறிவிடுவான். இதுதான் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திறமை மட்டும் உள்ளவன் இத் துரோக த்தை திறம்படச் செய்துகொண்டிருக்கிறான்.

இயக்கத்தின் தலைமை செயலிழந்தபோது அக் காலத்தில் ஸ்தாபன வடிவத்தில் இருந்த எமது இயக்கத்தின் வெளிநாட்டுக் கிளைககள்இ செயல்பட ஆர்வமாக இருந்த அனைவரையும் இணைத்து தற்காலிகமான ஒரு செயற்பாட்டுக் குழுவை அமைத்து செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அனைவரையும் அணைப்பதற்கு பதிலாக முரண்பாடு களை ஏற்படுத்தி அனைவரையும் துரத்தி விட்டார்கள். அதன் விளைவு எதிரி இச் சூழ்நிலையை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டான். பல இயக்கங்கள் உருவாகிறதுக்கு இதுவே காரணமாகி விட்டன .உண்மை யானவர்கள் புதிய இயக்கங்கள் ஆரம்பிக்க மாட்டார்கள். அனைவரையும் ஒன்றினைக்கவே முயற்சி செய்வார்கள். கிளைகள் தலைமையாகிவிட முடியாது. கிளைகள் மீண்டும் இயக்கத்தை ஜனநாயக வழியில் அமைப்ப தற்கு உதவ முடியும். யதார்த்தத்தை புரிந்துகொண்டு எமது வெளிநாட்டுக் கிளைகள் இயங்க விரும்பும் முன்னாள் போராளிகள் உண்மையான செயல்பாட்டாளர்கள் அனைவரையும் இணைத்து தற்காலிக ‘ தமிழீழ த்துக்கான செயற்பாட்டுக் குழு ‘ ஒன்றை அமைத்து உடனடியாக செயல் பட ஆரம்பிக்க வேண்டும். இல்லை எனில் தமிழீழத்தில் கோவணம் கூட எமக்கு மிஞ்சாது.

சரியான ஒரு தலைவர் தோன்றும் வரை தலைமை நிர் வாகி ஒருவரை ஒரு வருட சுற்று வட்டத்தில் ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையால் எவரும் தாழ்ந்து விடப் போவதில்லை.
நாம் எதிரிகளிடம் இருந்து பல விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
‘ எதிரி எம்மை அழிப்பதில் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறான் ‘
‘ இராசதந்திரத்திலும் உச்சத்தில் இருக்கிறான் ‘
இது இரண்டையும் அவனிட மிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பிரிந்து நின்று நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் பிழையானவை மட்டுமல்ல இவை அனைத்தும் எதிரியின் நிகழ்ச்சி நிரல்களேயாகும்.

அனைவரும் ஒற்றுமையாக ஒன்றுபட்டு செய்யும் சரியான செயல்பாடுகள் ஒன்றே தலைவனின் கனவு மாவீரகளின் கனவு தமிழீழ மக்களின் கனவு என அனைவரின் கனவுகளும் சாத்தியப்பட உதவும்.
தமிழீழம் தமிழர்களின் வாழ்வு ! தமிழர்களின் கனவு ! தமிழர்களின் மூச்சு ! இது ஓநாய்களின் குதறல்களாலும் நரிகளின் ஊழைகளாலும் காக்கை வன்னியர்களின் காட்டிக்கொடுப்பாலும் முகமூடி கொள்ளை யர்களாலும் கலைந்துவிடாது. கரைந்தும் விடாது.
இவ் ஈனர்களின் செயல்பாட்டினால் தமிழீழம் காலம் தாமதப்படுத்தப்படும். தற்காலிகமாக மீண்டும் மக்கள் அடிமைகளாக்கப் படுவார்கள். ஆயினும் மீண்டும் தந்தை செல்வாவின் காலத்தைப் போல் தலைவர் பிரபாகரனின் காலத்தைப் போல் இளம் வயதினர்களும் மாணவச் செல்வங்களும்இ மக்களும் மீண்டெழுவார்கள்.

-மாறன்

SHARE