தமிழர்களது பிரச்சினைகள் நீடிப்பதற்கான காரணம் குறித்து சிவசக்தி ஆனந்தன் விளக்கம்

55

தமிழ் தலைமைகள் தமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை, கடந்த நான்கு வருடங்களாக வீணாக்கியதன் விளைவாகவே தமிழர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாது, இன்னும் நீடித்து வருகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தினார்.

வவுனியாவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், “எமது பிரதேசத்தின் அபிவிருத்தியையும் தீர்வையும் காண தமிழ் தலைமைகள் தவறிவிட்டனர்.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்தோம். இந்த ஆட்சி மாற்றத்தின் ஊடாக எங்களுடைய பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் நீண்டகாலமாக எங்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாணலாம் என நினைத்து மாற்றத்தை ஏற்படுத்தினோம்.

ஆனால் எங்களுடைய அரசியல் தலைவர்கள் அந்த சந்தர்ப்பத்தை மக்களுக்காக பயன்படுத்தவில்லை என்பதே கவலையான விடயம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE