கிழக்கு மாகாண சமூக விஞ்ஞானப்போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் முதலிடம்.

176

 
சமூக விஞ்ஞானப் போட்டியின் முடிவுகளின்படி பட்டிருப்பு கல்வி வலயம் 5இடங்களையும்இ7இரண்டாம் இடங்களையும்இ5 மூன்றாம் இடங்களுமாக மொத்தமாக 17 இடங்களைப் பெற்று பட்டிருப்பு கல்வி வலயம் கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தை பெற்றுக்கொண்டது.
கல்வி அமைச்சின் சமூக விஞ்ஞானப்போட்டியானது வருடாந்தம் பாடசாலைஇவலயம்இமாகாணம்இஅகில இலங்கை ரீதியில் நாடாத்தப்பட்டு வருகின்றது.இவற்றில் பட்டிருப்பு கல்வி வலயமானது 2012ம் ஆண்டிலிருந்து கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்தினை பிடித்து ஐந்து வருடங்களாக தொடர் சாதனை பெற்று வருவதாக பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண மட்டத்தில் 2016 ஆம் ஆண்டு 15 இடங்களைப்பெற்று முதலாம் இடத்தினை பெற்ற பட்டிருப்பு கல்வி வலயம் 2017 ஆம் ஆண்டில் 17 இடங்களை பெற்று மீண்டும் தேசிய போட்டிக்கு தரப்படுத்தப்பட்டுள்ளது.இப்போட்டியில் இருபது வீத இடத்தினை பட்டிருப்பு வலயம் பெற்றுள்ளது.கிழக்கு மாகாண சமூக விஞ்ஞானப்போட்டியில் பங்குபற்றி முதலிடத்தை தட்டிக்கொண்டமைக்கு வழிகாட்டல்களையும்இஆலோசனைகளையும் வழங்கிய சமூக விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர்களான இ.தவராசாஇ சு.விஸ்வலிங்கம் மற்றும் ஆசிரியர்களும்இமாணவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் எனத்தெரிவித்தார்.