முதன் முதலில் மக்கள் முன் தோன்றி உரையாற்றினார்.தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் சுதுமலையில்

317

1987 ஆகஸ்ட் 4 – இந்திய ஆக்கிரமிப்பின் அநீதிகளை எடுத்துரைத்து தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலையில் முதன் முதலில் மக்கள் முன் தோன்றி உரையாற்றினார்.
தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாது என உணர்ந்த ஜே. ஆர். செயவர்த்தன ராஜீவ் காந்தியிடம் சரணடைகின்றார்.
இந்திய ராஜீவ் அரசின் நயவஞ்சனையும் இலங்கை ஜெ ஆர் ஜெயவர்த்தன அரசின் பேரினவாதமும் தமிழ் மக்களுக்கு எதிராக உருவாக்கிய ஒப்பந்தம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முடக்கி தமிழ் மக்களை அடிமைகளாக வாழ உருவாக்கப்பட்டதோடு தமிழீழ விடுதலை புலிகளால் அதை ஏற்று கொள்ளுமாறு நியூடெல்லியில் காவலில் வைத்து பயமுறுத்தி எச்சரித்து நயவஞ்சனையாக இனிக்க பேசி என பலவகைகளிலும் தமிழீழ தேசிய தலைவரை அடி பணிய திணிக்கின்றது ராஜீவ் அரசு.
“மண்ணாசை, பதவி ஆசை, ஈற்றில் குடும்ப பாசம்” என அத்தனை ஆயுதங்களையும் ரஜீவகாந்தியும் கையாண்டும் அவர் விலை போகவில்லை.
மாவீரர்களை மனதில் வைத்து மறுத்து உரைத்து தெளிவாக விலை போகாத கொள்கைகளை முன்வைத்து விட்டு மக்கள் முடிவே என் முடிவு என கூறுகின்றார்.
அமைதிப்படை என கூறி எங்கள் மண்ணுக்கு வந்து ஆக்கிரமிப்பு படையாக உருமாறிய ஆதிக்க இந்திய படையின் கோரத்தாண்டவம் எங்கள் மண்ணில் வெறியாட்டம் ஆட எங்கள் மண்ணில் களமிறங்கியது.
தமிழினத்தின் தன்மானத்தை உயிராக நினைத்த எங்கள் தலைவர் பிரபாகரன் அவர்கள் அஞ்சாமல் விலை போகாமல் திமிராக எதிர்க்கிறார்.
அப்பொழுது அவர் மக்கள் மத்தியில் ஆகஸ்ட் 4 சுதுமலை அம்மன் ஆலயத்தின் முன் முதன் முதலாக தோன்றி “சுதுமலை பிரகடனம்” ஆற்றுகிறார்.
சக்திக்கு மீறிய ஆக்கிரமிப்பின் தன்மை உணர்ந்து இந்தியத்தின் சூழ்ச்சியை எடுத்து கூறுகின்றார். “நாம் இந்தியாவை எதிரியாக பார்க்கவில்லை. ஆனால் இந்தியா எமக்கு துரோகம் செய்கின்றது” என கூறுகின்றார்.
15 வருட தியாகங்களால் கட்டி எழுப்பப்பட்ட தமிழரின் போராட்டத்தை ராஜீவ் ஓரிரு தினங்களுக்குள் அழித்தொழிக்க வெறி கொண்ட படையை ஏவி விட்டார். வல்லரசை எங்கே இந்த இளைஞர்கள் வெல்வார்கள் என இந்தியா நினைத்ததை மாற்றி எதிரி எத்தகைய பலம் கொண்டு இருந்தாலும் நேர்மையும் துணிவும் மக்கள் பலமும் கொண்ட போர் குணம் கொண்ட விடுதலை வீரர்களால் போராட்டம் பின்னடைவுகளை கடந்து முன்னூக்கி செல்லும் என்பதை பின்னாளில் நிரூபித்து காட்டினார்கள் பிரபாகரன் அவர்களின் மக்கள் படையினர்.

https://youtu.be/qwVvgOAfqrE