செட்டிகுளத்தில் மக்களின் காணியை சுவீகரித்து பண்ணை அமைத்த இராணுவம்: காணி உரிமையாளருக்கே மரக்கறிகளை விற்பனை செய்து இலாமீட்டும் நிலை

97
செட்டிகுளத்தில் மக்களின் காணியை சுவீகரித்து பண்ணை அமைத்த இராணுவம்: காணி உரிமையாளருக்கே மரக்கறிகளை விற்பனை செய்து இலாமீட்டும் நிலை
செட்டிகுளத்தில் மக்களின் காணியை சுவீகரித்து பண்ணை அமைத்து விவசாயம் செய்து அதனை அக் காணி மக்களுக்கே விற்பனை செய்யும் இராணுவத்தின் செயற்பாடு குறித்து காணி உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
வவுனியா, செட்டிகுளம் இராமையன்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான 123 ஏக்கர் விவசாய காணியை கையகப்படுத்தியுள்ள இராணுவம் அப் பகுதியில் பண்ணை அமைத்து விவசாய உற்பத்திகளில் ஈடுபட்டு வருவதுடன், அதன் அறுவடையை அக் கிராம மக்கள் வசிக்கும் வாழவைத்தான் குளம் பகுதியில் விற்பனை செய்து வருமானத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
இதன்காரணமாக இக் கிராமத்தில் விவசாயம் செய்து தமது வாழ்வாதாரத்தைப் போக்கிய மக்கள் தொழில் செய்ய முடியாத நிலையில் மிகவும் கஸ்ரங்களை அனுபவித்து வருகின்றார்கள். 2009 ஆம் ஆண்டு வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை தங்க வைப்பதற்கான இடைத்தங்கல் முகாம் அமைக்க பெற்றுக் கொள்ளப்பட்ட தமது விவசாய காணியை இராணுவம் கையகப்படுத்தியுள்ளதாகவும், அதனை விடுவித்து தமது வாழ்வாதரத்திற்கு உதவ அரசியல்வாதிகளும், நாட்டின் ஜனாதிபதியும் முன்வர வேண்டும் எனவும் அம் மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.