தமிழீழ தாயகத்தில் சிங்கள பூர்வீகமாக மாறும் கல்வெட்டுக்கள்-கஜன்

840

ஐநா மனித உரிமைப்பேரவையின் 41வது கூட்டத்தொடர் தற்பொழுது ஜெனிவா மனித உரிமைப்பேரவையில் நடைபெற்று வரும் நிலையில் அதன் முன்றலில் சிறீலங்கா அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப்படுகொலை ஆதாரங்களாக இருக்கும் நிழற்படங்களை மனித உரிமைச் செயற்பாட்டாளர் கஜன் பார்வைக்கு வைத்து கடந்த ஏழுவருடங்களாக இம்முறையும் சர்வதேசத்தின் பார்வைக்கு வைத்து நீதி கோரிவருகின்றார்.இன்று ஜெனிவா முன்றலில் கருத்து வெளியிட்ட மனித உரிமைச்செயற்பாட்டாளர் கஜன்

சிங்கள அரசாங்கங்களின் திட்டமிட்ட இனப்படுகொலையை சர்வதேசத்துக்கு அம்பலப்படுத்தி தொடர்ந்து போராடி வருகின்றோம்.ஆனால் தொடர்ந்தும் சிங்களப் பேரினவாத அரசாங்கம் திட்டமிட்ட தமிழின அடையாள அழிப்பை மேற்கொண்டு தாயகத்தை சிங்கள மயமாக்கி வருகின்றது.குறிப்பாக 2009க்கு முன் யுத்தம் மூலம் தமிழர்களை அழித்த சிங்கள பேரினவாத அரசாங்கம் இன்று அபிவிருத்தி என்ற போர்வையின் தமிழ் மக்களின் பிரதிநிதிகளை தம் வலைக்குள் வீழ்த்தி தாயகப்பிரதேசங்களில் கட்டிடங்களிலும் கிராமங்களிலும் குளங்களிலும் வீதிகளிலும் சிங்கள தலைவர்களின் பெயர்களையும் சிங்கள அமைச்சர்களின் பெயர்களையும் கல்வெட்டுக்களாக தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் அனுசரணையுடன் பதித்து வருகின்றது.இந்தக் கல் வெட்டுக்கள் காலம் காலமாக இருக்கப்போகின்றது.இன்னும் ஐம்பது நூறு ஆண்டோ கடக்க இந்த தலைமுறை இருக்கப்போவதில்லை.அடுத்த தலைமுறை இந்த கல்வெட்டுக்களை காணுகின்றபோது தமிழர் தாயகப்பிரதேசத்தில் சிங்களத் தலைவர்கள் குளங்களை அமைத்ததாகவும் பாடசாலைகளை திறந்ததாகவும் வீதிகளை அமைத்ததாகவும் கல்வெட்டுக்கள் சான்று பகரும் அப்போது அக்காலத்து சிங்களத் தலைமுறை தமிழர் தாயகத்தை முற்று முழுதாக தங்களுடைதாக உரிமை கோரும் நிலை ஏற்படும்.இத்தகைய வரலாற்று எதிர்கூறலோடு தூரநோக்காக சிங்களப் பேரினவாதம் செயற்பட்டு வருகின்றது.

எனவே நாம் எமது விடுதலைப் போராட்டத்தை விரைவு படுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்.எதிர்வரும் ஒன்பதாம் மாதத்தில் பிரான்சில் இருந்து ஐநா நோக்கி மாபெரும் தமிழின நீதி கோரும் நடைப்போராட்டம் நடைபெறவிருக்கின்றது.இதில் அனைவரும் தமிழர்கள் என்ற ஒரு குடையின் கீழ் திரண்டு இணைந்து திரண்டு பேராட முன்வரவேண்டும் என மனித உரிமைச்செயற்பாட்டாளர் கஜன் வேண்டுகோள் விடுத்தார்.