வடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்
வடமாகாண குத்துச்சண்டை தகுதிகாண் போட்டியில் வவுனியா மாவட்டம் 3 தங்கப்பதக்கம் உள்ளிட்ட 8 பதங்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.



2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு பெருவிழாவை முன்னிட்டு முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் மாகாண ரீதியில் நடைபெற்ற தகுதிகாண் குத்துச்சண்டைப் போட்டியில் குத்துச் சண்டை பயிற்றுவிப்பாளர் எம்.சுரங்க அவர்களின் மாணவர்களான வவுனியா மாவட்ட வீர, வீராங்கனைகள் 3 தங்கப் பதங்கம் உள்ளிட்ட 8 பதங்களைப் பெற்றுள்ளனர்.



91 கிலோவிற்கு மேற்பட்ட எடைப் பிரிவில் தங்கப்பதக்கத்தையும், 81 கிலோவிற்கு மேற்பட்ட எடைப்பிரிவில் தங்கப்பதக்கத்தையும், 80 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும், 60 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் மற்றும் இரு வெண்கலப் பதக்கம் என ஆறு பதக்கங்களை பெற்றுள்ளனர்.



அத்துடன் வடமாகாணத்தின் சிறந்த குத்துச் சண்டை வீரராகவவுனியாவைச் சேர்ந்த எம்.நிக்சன் ரூபராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் வவுனியா மாவட்ட ஆண்கள் குத்துச் சண்டை அணி மூன்றாம் இடத்தையும், பெண்கள் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளதுடன், பெண்கள் அணியில் 48 தொடக்கம் 50 கிலோ பிரிவில் வவுனியா மாவட்டம் தங்கப்பதக்கத்தையும், 60 கிலோ பிரிவில் பெண்கள் அணி வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர்











