ஈழத்தமிழருக்கு தோள் கொடுப்போம் பிரான்சில் -சென்னை மாணவன் ஹரி

ஈழத்தமிழருக்கு நடந்த இனப்படுகொலை உலகமெங்கும் அறியச்செய்தல் வேண்டும் பிரான்சில் கல்வி கற்கும் தமிழ் நாட்டு மாணவன் ஹரி தெரிவித்துள்ளார்

பிரான்சு அனைத்துலக மனித உரிமைச்சங்கம் தமிழ்பண்பாட்டு வலையம் என்பன தமிழினப்படுகொலை ஆதாரங்களான நிழற்படங்களை பிரான்சின் நகர சபை பாராளுமன்றம் என்பவற்றின் முன் பார்வைக்கு வைத்து நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் நடத்திவருகின்றது.குறித்த போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேற்று வந்த தமிழ் நாட்டில் இருந்து வந்து பிரான்சில் உயர் கல்வி கற்ற மாணவன் ஹரி அங்கு நிழற்படங்களை பார்வையிட்ட பின் ஈழத்தமிழருக்கு நடந்திருக்கும் கொடுமை துயரமானதுஎன்றும் அது உலகமெல்லாம் இருக்கின்ற நாடுகளுக்கு தெரியப்படவேண்டும் எனவும் தமிழ் நாட்டின் தன்னையொத்த மாணவர் சமுதாயம் எப்போதும் ஈழத்தமிழருக்கு எப்போதும் ஆதரவானது எப்போதும் தோள்கொடுக்கும்எனவும் தெரிவித்ததோடு தானும் தன்னுடைய நண்பர்களுக் குறிப்பாக பிரான்சு நண்பர்களுக்கு எடுத்துச்சொல்வேன்.அதுபோல ஈழத்தமிழர்கள் இன்று உலகமெங்கும் தாயகத்தை இழந்து வந்து பணி புரிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.அவர்களும் தாம் பணியாற்றும் இடங்களின் மேலதிகாரிகளுக்கு வேற்று நண்பர்களுக்கு தமிழர்களுக்கு ஈழத்தில் சிங்கள அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட கொடுமைகளை புரியவைக்கவேண்டுமெனவும் மாணவன் ஹரி கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.