தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி பிரான்சு Coubron நகரசபை முன் கவனயீர்ப்பு

இலங்கையில் பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கங்கள் காலத்துக்கு காலம் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட தமிழினப்படுகொலையை நடத்திவந்திருக்கின்றது.

இதன் மூலம் இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்படுவதுடன் நில ஆக்கிரமிப்பை மேற்கொண்டும் தமிழர்களை கொலை செய்தும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியும் மிக மோசமான மனித குலத்துக்கு எதிரான மீறல்களை சிங்கள பேரினவாதம் செய்துவந்துள்ளதுடன் இப்போதும் தமிழர்களை ஒரு திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் வைத்து கண்காணித்துவருதுடன் தமிழ் மக்களின் உரிமைகளை பறித்து சுதந்திரத்தை அடக்கி ஒடுக்கிவருகின்றது இலங்கை சிங்கள அரசாங்கம் இதற்கெதிராக தமிழ் மக்கள் மேற்கொண்ட போராட்டம் முள்ளிவாய்காலில் அடக்கி ஒடுக்கப்பட முனைந்தபோதும் அது கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மேலும் அறவழியில் வலுப்பெற்று சுதந்திர தாகத்துடன் சர்வதேச அரங்கில் நடைபெற்றுவருகின்றது.முள்ளிவாய்காலில் நடத்தப்பட்ட தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்பதன் மூலம் தமிழர்கள் இழந்த உரிமைகளை பெற்றுக்கொள்ள இந்த போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் பிரான்சு அனைத்துலக மனித உரிமைச்சங்கம் தமிழ் பண்பாட்டு வலையம் என்பன சர்வதேசத்தின் கவனத்தை யும் ஆதரவையும் பெறும் பொருட்டு இனப்படுகொலை ஆதாரங்களை பார்வைக்கு வைத்து கவனயீர்ப்பில் தினமும் ஈடுபட்டுவருகின்றனர்.இன்று அந்த போராட்டம் பிரான்சு133 Rue Jean Jaurès, 93470 Coubron நகர சபை முன் நடைபெற்றுள்ளது.