தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி தொடரும் போராட்டம் இன்று பிரான்சு Neuilly-Plaisance நகர சபை முன்பு

பிரான்சு அனைத்துலக மனித உரிமைச்சங்கம் அதன் செயற்பாட்டாளர் கஜன் தமிழ் பண்பாட்டு வலையம் என்பன ஓய்வுறாத இராப்பகலான கவனயீர்ப்பை தற்பொழுது தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது பிரான்சின் நகர சபைகளின் முன் அந்த கவனயீர்ப்பு தொடர்கின்றது

ஈழத்தமிழர்களுக்கு கடந்த 1948ல் இருந்து சிங்களப் பேரினவாத அரசாங்கங்களால் இழைக்கப்பட்டு வரும் இன்னல்கள் இன அழிப்புக்கள்இன்று சர்வதேசத்தின் முற்றத்திற்கு வந்து அம்பலமாகியிருக்கின்றது.தமிழ் மக்கள் சாத்வீக வழியிலும் ஆயுதம் ஏந்தியும் நடத்திய விடுதலைக்கான போராட்டத்தை ஈழத்தில் அடக்கி ஒடுக்கியும் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தும் உலகத்திற்கு கண்களுக்கு பயங்கரவாதமாக காட்சிய சிங்கள இனவாத அரச பயங்கரவாதம் முள்ளிவாய்க்காலில் நடத்திய மனித குலமே அதிர்ச்சியுறும் இனப்படுகொலை கூட்டு பாலியல் வன்புணர்வுகள் உயிருடன் சுட்டுக்கொல்லுதல் காணாமல் ஆக்கச்செய்தல் போன்றவரை எச்சத்தில் எழுந்த தமிழர்களின் போராட்டம் காரணமாக உலகத்தின் கண்களுக்கு தெரியவந்த நிலையில் இன்று அதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலைக்கு சிங்கள அரசு தள்ளப்பட்டுள்ளது.ஆயினும் அதில் இருந்து தப்பித்துக்கொள்ள சிங்கள அரசு பல்வேறு ஏமாற்று நாடகங்களையும் இழுத்தடிப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றது.காரணம் தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமன் என்பதால் சிங்கள காலத்தை இழுத்தடித்து தமிழ் போராட்டங்களை சோர்வுறச்செய்யும் தந்திரத்தை கையாள முனைகின்றது.

எனினும் புலம் தமிழர்களின் பிரான்சு அனைத்துலக மனித உரிமைச்சங்கம் அதன் செயற்பாட்டாளர் கஜன் தமிழ் பண்பாட்டு வலையம் என்பன ஓய்வுறாத இராப்பகலான கவனயீர்ப்பை தற்பொழுது தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது பிரான்சின் நகர சபைகளின் முன் அந்த கவனயீர்ப்பு தொடர்கின்றது.அந்த வகையில் இன்று பிரான்சு. 6 Rue du Général de Gaulle, 93360 Neuilly-Plaisance நகர சபைமுன் தமிழினப்படுகொலை சாட்சியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு கவனயீர்ப்பு போராட்டமும் பரப்புரையும் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.