வார்த்தைகளை விட வரலாற்று ஆதார நிழற்படங்கள் வலுமிக்கது-மேத்தா

வார்த்தைகளால் சொல்வதை விடவும் கடந்த 73 ஆண்டுளுக்கு மேலாக சிங்களப் பேரினவாதத்தால் நடத்தப்படும் தமிழினப்படுகொலையின் ஆதாரமான நிழற்படங்கள் பார்வைக்கு வைக்கப்படும்போது அது காத்திரமான செய்தியை சர்வதேசத்துக்கு புலப்படுத்தும் என தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் மேத்தா தெரிவித்துள்ளார்.

பிரான்சு அனைத்துலக மனித உரிமைச்சங்கம் தமிழ் பண்பாட்டு வலையம் என்பன இணைந்து பிரான்சின் நகர சபைகளின் முன் தமிழினப்படுகொலை சாட்சியங்களாக இருக்கும் நிழற்படங்களை பார்வைக்கு வைத்து நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்திவருகின்றது.நேற்று பிரான்சு Neuilly-Plaisance நகர சபை முன் குறித்த போராட்டம் நடைபெற்றபோது தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் மேத்தா கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்துகொண்டார் அவர் மேலும் தெரிவிக்கையில்

தமிழீழ விடுதலைச் செயற்பாட்டாளர்கள இணைந்து இந்த இனப்படுகொலை சாட்சியங்களை பார்வைக்கு வைத்து பரப்புரை செய்து சர்வதேச நீதி கோரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.கொரோனா பேரிடருக்கு மத்தியிலும் இந்த தேசக்கடமையை செயற்பாட்டாளர்கள் அர்ப்பணிப்புடன் செய்து வெருகின்றார்கள்.இது வலுமிக்க செயற்பாடு அவ்வளவு இலேசானதல்ல பிரான்சில் முப்பத்தியாறுக்கு மேற்பட்ட நகரசபைகளின் முன்பு இந்த நிழற்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு அந்தந்த நகர சபை முதல்வர்கள் உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் எமது மக்களுக்கு இலங்கையில் சிங்கள பேரினவாத அரசாங்கத்தால் இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அநீதிகள் பற்றி எடுத்துக்கூறப்பட்டு ஆதரவு கோரப்பட்டுள்ளது.இந்தச்செயற்பாட்டை மனித உரிமைச்செயற்பாட்டாளர் கஜன் கடந்த பல ஆண்டுகளாக செய்து வருகின்றார்.ஐநா மனித உரிமைப்பேரவை முன் எப்போதும் இந்த நிழற்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு வருகின்றன எனவே கஜனின் இந்த தேசக்கடமைக்கு நாம் அனைவரும் தமிழ் மக்கள் தோள் கொடுக்கவேண்டும்.

அது மட்டுமன்றி புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் இப்போது தமிழர்களின் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.எனவே வாக்குகளை சரியாக எமது தமிழின விடுதலைக்கு எதிர்காலத்தில் பலம் தரக்கூடியவாறு பயன்படுத்தவேண்டும்.தேர்தல்களில் போட்டியிடும் எமது தமிழீழ போராட்டத்திற்கு ஆதரவான பிரமுகர்களுக்கு அரசியல்வாதிகளுக்கு வாக்குகளை செலுத்தி அவர்களை பலப்படுத்தவேண்டும் எனவும் மேத்தா தெரிவித்தார்.