வரலாறுகளின் தந்தையாக இருக்கின்றார்.அமரர். செல்வரட்ணம்.

855

அமரர் .செல்லத்துரை செல்வரட்ணம் அவர்கள் இலண்டனில் இயற்கை எய்தியுள்ளார்.பருத்தித்துறை மண்ணில் உதித்த அவருடைய அவருடைய வாழ்வின் பயணத்தில் ஒரு பெரிய தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கான அர்ப்பணிப்பின் கதை புதைந்துள்ளது.

அதை அவர் மீளாத்துயில் கொள்ளும் இந்த தருணத்தில் மீட்டுவது மிகபொருத்தமும் கடமையும் கூட.

எமது விடுதலைப்போராட்டம் காடுகளுக்குள்ளும் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டும் போராளிகளால் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் போராட்டத்தை தாங்கும் மடியாக இருந்து ஏராளம் குடும்பங்களில் செல்வரட்ணம் அவர்களின் குடும்பமும் ஒன்று

அவருக்கு ஆறு பிள்ளைகள் இன்று இரண்டு பிள்ளைகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

நால்வர் போராட்ட பாதையில் ஒவ்வொரு காலப்பகுதியில் ஆகுதியாகிவிட்டார்கள். அவருடைய மூத்த மகன் போராளிகளும் மக்களும் அறிந்த முல்லைத்தீவு மண்ணுக்கு ஒரு காலத்தில் தளபதியாக இருந்த (திவாகர்) அவர்கள்.நீண்ட காலமாக போராட்டத்தில் பயணித்த மூத்த போராளி.தலைமைக்கு நம்பிக்கையானவர்.அவர் சுகயீனம் காரணமாக சாவடைந்தார்.இவருடைய மகள் சுதா வன்னி மாங்குளம் போர்க்களத்திலே 1990 ஆண்டு வீரச்சாவடைந்தார்.

இன்னொரு மகன் (சுதன்) தேச விரோதக்கும்பல்களால் 1989ஆண்டு கொல்லப்பட்டார்.இன்னொரு புதல்வர் (வாவா) விடுதலைப் போராட்டப் பணியில் கடற்பரப்பில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போயிருந்தார்.

இவ்வாறு இழப்புகளை துயர்களை சந்தித்தபோதும் தாய் மண்ணுக்காக தம்மை கொடுக்கத் தயங்காத பிள்ளைகளை தந்த தந்தையாக இன்று எம்மை விட்டு பிரிந்திருக்கின்றார். இன்று தாய் நிலம் சிங்கள ஆக்கிரமிப்பால் முழுமையாக நிறைந்திருக்கின்றது.விடுதலை பெற்ற ஒரு நிலத்தில் வாழ வேண்டுமென்பதே இவரதும் இவரது பிள்ளைகளதும் கனவாக இருந்தது.

அந்தக்கனவுடனேயே அவருடைய ஆத்மா விடைபெற்றுள்ளது .நாட்டுப்பற்று மிகுந்த இனப்பற்று நிறைந்த அவருக்கு எமது ஆழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

விடுதலைப்போராட்டத்தில் அவருடைய ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தனித்தனி வரலாறு உண்டு.ஆதலால் இவர் வரலாறுகளின் தந்தையாக இருக்கின்றார்.

புனிதபூமி