சிறீலங்கா அரசின் தமிழினப்படுகொலை ஆதாரங்கள் பிரான்சு Gournay-sur-Marne நகர சபை முன்றலிலும் பார்வைக்கு

சிங்களப் பேரினவாத அரசாங்கம் இலங்கையில் தமிழ் மக்கள் மீது காலம்காலமாய் மேற்கொண்டு வரும் கட்மைக்கப்பட்ட தமிழினப்படுகொலைக்கு இன்றுவரை நீதி கிடைக்காத நிலையே காணப்படுகின்றது.

நீதி தமிழர்களுக்கு மறுத்து இன்றும் தமிழர் தாயகப்பகுதிகளில் அடையாள அழிப்பை சிங்கள அரசு மேற்கொண்டு வருகின்றது.தமிழர் நிலங்கள் இன்னமும் அபகரிக்கப்படுகின்றன.போர் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகள் கடக்கின்றபோதும் முள்ளிவாய்க்கால் உட்பட இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களில் சிங்கள படைகளாலும் துணை ஆயுதக்குழுக்களாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நிலை என்பதை இன்னமும் சிங்கள அரசு வெளிப்படுத்தவில்லை.காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்காக இன்னமும் இராப்பகலாக உறவுகள் காத்திருக்கின்றனர்.போராட்டங்கள் தொடர்கின்றது.இலங்கைளில் நீதி கேட்ட எண்ணற்ற கவனயீர்ப்பு போராட்டங்களை பாதிக்கப்பட்டவர்கள்உ செய்தபோதும் சிங்கள அரசாங்கம் அதற்கு செவிசாய்க்கவில்லை.மட்டுமின்றி ஐநா மனித உரிமைப்பேரவையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் சிங்கள அரசு குப்பையில் போட்டுவிட்டு தன்னுடைய இராணுவ பாணியிலான ஆட்சியை நடத்திவருகின்றது.

இந்த நீதி பெற சர்வதேசம் தழுவிய கவனயீர்ப்பு போராட்டங்களை தமிழ் மக்கள் வலுப்படுத்தவேண்டிய காலச்சூழலில் பிரான்சு அனைத்துலக மனித உரிமைச்சங்கம் தமிழ் பண்பாட்டு வலையம் என்பன தமிழினப்படுகொலை ஆதாரங்களை பார்வைக்கு வைத்து பிரான்சின் நகர சபைகளின் முன் தீவிரமான கவனயீர்ப்பை மேற்கொண்டு வருகின்றார்கள் இன்று பிரான்சு10 Avenue du Maréchal Foch, 93460 Gournay-sur-Marne நகர சபை முன்பு அந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.