கறுப்பு யூலை நினைவு நாளில் பிரான்சு Le Bourget நகரசபை முன் தமிழினப்படுகொலை ஆதாரங்கள்

இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள பேரினவாதத்தால் மிகப்பெரிய இனக்கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டு ஒரு வாரமாய் கொலை வெறித்தாண்டவம் நடத்தி 38 ஆண்டுகள் கடக்கின்றன.

தமிழர்கள் வரலாற்றில் கறுப்பு பூலை என்று அழைக்கப்படுகின்ற தமிழினப்படுகொலையின் பெரிய அரங்கேற்றங்களின் ஒன்றான 1983 யூலைக்கலவரத்தில் பல்லாயிரம் மக்கள் சிங்கள பொலிசாராலும் படைகளாலும் காடைகளாலும் கொல்லப்பட்டனர்.பல நூறு பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.தமிழர்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டு அகதிகள் ஆக்கப்பட்டதுடன் தமிழ் மக்களுக்கு ஒரு சுதந்திரம் தேவை விடுதலை தேவை என்ற போராட்டத்திற்கு நிர்ப்பந்திக்கபட்டனர்.அதன் பிறகு சிங்கள பேரினவாதத்திடமிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள தமிழர்கள் ஆயுதமேந்திப்போராடினர்.அந்தப்போராட்டமே சர்வதேசத்தின் துணையுடன் முள்ளிவாய்க்காலில் மிகப்பெரும் தமிழினப்படுகொலை நடத்தப்பட்டு மௌனிக்கப்பட்டது.ஆயினும் தமிழர்கள் கறுப்பு யூலைக்கு முன்பும் பின்புமாக கடந்த 73 ஆண்டுகளில் தமிழர்கள் சந்தித்த இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி உலகளாவிய போராட்டத்தில் குதித்தனர்.அந்த அறவழிப்போராட்டம் கடந்த 12வருடங்களுக்கு மேலாக ஐநா முன்னும் பல நாடுகளிலும் நடத்தப்பட்டுவருகின்றது.கறுப்பு யூலை உள்ளிட்ட தமிழினப்படுகொலையின்எ ஆதாரங்களை முன்னிறுத்தி பார்வைக்கு வைத்து பிரான்சு அனைத்துலக மனித உரிமைச்சங்கம் தமிழ் பண்பாட்டு வலையம் என்பன ஒரு சர்வதேச போராட்டத்தை தொடர்ந்து நடத்திவருகின்றது.

கறுப்பு யூலை நினைவு நாளான இன்று பிரான்சு 65 Avenue de la Division Leclerc, 93350 Le Bourget நகரசபை முன் தமிழினப்படுகொலை ஆதாரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு கவனயீர்ப்பு நடைபெற்றுள்ளது.