பிரான்சில் ‘இளங்கலைமாணி’ (B.A) தமிழியல் பட்டக்கல்வியில் தொடரும் வினைத்திறன்!

849

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமும், தமிழ் இணையக் கல்விக்கழகமும்- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்தும் தமிழியல் (B.A) பாடநெறியில் பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்வு , தேர்வின் இறுதி நாளான 08/08/2021 அன்று தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பட்டகர்களுடன் அவர்களின் பெற்றோர்களும் இந் நிகழ்வில் மதிப்பளிக்கப்பட்டனர்.

சுதாகர் துஷாந்தி, கெங்காதரன் லலிதாவதி, ஜெயசிங்கம் ஜெதுஷா தர்மலிங்கம் யசோதா ஆகியோரே இந்தத் தொகுதியில் வெளியேறிய பட்டகர்களாவர்.

இவர்களில் ஜெயசிங்கம் ஜெதுஷா என்பவர் பிரான்சில் பிறந்து வளர்ந்து தமிழ்ச்சோலையில் வளர்தமிழ்- 12 நிறைவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டச்சான்றிதழ் பிரெஞ்சு அரசால் ஐரோப்பிய மட்டத்திலான பட்டமேற்படிப்பிற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் (Formation reconnue par l’Etat par le biais de l’attestation de comparabilité qui confère le grade de licence (bac +3) தமிழ்ச்சோலையில் வளர்தமிழ்-12 படித்து முடித்த மாணவர்கள், இப்பட்டப்படிப்பை மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.
அந்தவகையில் பட்டப்படிப்பிற்கான இணையவழி நுழைவுத் தேர்வில் நல்லையா அதிசயா என்னும் மாணவி பகுதி-1 மற்றும் பகுதி-2 ஆகிய ஒவ்வொன்றிலும் நூறு புள்ளிகள் பெற்று உலகமட்டத்தில் சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

அத்தோடு சந்திரவதனி லவகுமார் மற்றும் ராஜமோகன் யானுசா ஆகியோர் இணையவழி பகுதி -1 இல் நூறு புள்ளியைப் பெற்றிருந்தனர். ஏனைய அனைத்து மாணவர்களும் இணைக்கு இணையாக 80 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தேர்வுகள் ஏனைய சில ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தப்பருவம் முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

நடராஜா அக்‌ஷனா (Ivry-sur-Seine தமிழ்ச்சோலை)
மனோகரன் லிஷானி (Aulnay-sous-Bois 2 தமிழ்ச்சோலை)
இராசேந்திரன் சரண் (Le-Blanc- mesnil தமிழ்ச்சோலை)
புஸ்பராசா அனிதா (Noisy-le-Grand தமிழ்ச்சோலை)
கிருஸ்ணானந்தன் ஆகாஷ் (Ivry-sur-Seine தமிழ்ச்சோலை)
சதீஸ் ஆரண்யா (Bondy தமிழ்ச்சோலை)
பிரான்சிஸ் மோகன்ராஜ் ஜதுசா (Ivry-sur-Seine தமிழ்ச்சோலை)
சிவபாதம் சௌமியா (Le-Blanc-mesnil தமிழ்ச்சோலை)
திலிப்குமார் தானுகா (Drancy தமிழ்ச்சோலை)
மயூரன் ஆரணி (Aulnay-sous-Bois 2 தமிழ்ச்சோலை)
வரதராஜா சுபதினி (Sothiya தமிழ்ச்சோலை)
பாஸ்கரன் பஷிகா (Roissy-en-Brie தமிழ்ச்சோலை)
நல்லையா அதிசயா (Aulnay-sous-Bois 1 தமிழ்ச்சோலை )
நாகயோதீஸ்வரன் டினோஜன் (Ivry-sur-Seine தமிழ்ச்சோலை)
ராஜமோகன் யனுசா (Sothiya தமிழ்ச்சோலை)
அகிலசீலன் அஞ்சனா (Le-Blanc-mesnil தமிழ்ச்சோலை), சுரேஸ்குமார் அஸ்னா ( Sothiya தமிழ்ச்சோலை), ஜெயச்சந்திரன் தமிழவன்La Courneuve தமிழ்ச்சோலை ஆகியோரே பிரான்சில் வளர்தமிழ் -12 வரை நிறைவு செய்து பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்களாவர்.

மேற்படி நிகழ்வில் முதலாம் ஆண்டு பட்டக்கல்வி மாணவி துஸ்யந்தன் இயல்வாணி கல்விச்செயற்பாடுகள் தொடர்பாகவும் இந்தப் பட்டப் படிப்பினூடு தொடரக்கூடிய ஐரோப்பிய மட்டத்திலான மேற்படிப்புகள், வேலை வாய்ப்புகள் தொடர்பாகவும் பட்டப்படிப்பில் நுழையவிருக்கும் புதிய மாணவர்களுக்கான விளக்கவுரையொன்றை நிகழ்த்தினார்.

கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழ்ச் சோலைத் தலைமைப்பணியகம் தமிழ்நாட்டின், தமிழ் இணையக் கல்விக்கழகத்துடன் இணைந்து மேற்படி தமிழியல் பட்டப்படிப்பை நடத்தி வருகின்றது. ஆண்டுதோறும் இரு பருவத் தேர்வுகளும் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தில் நடைபெறுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக நாட்டின் சுகாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு, தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்திலும் சோதியா கலைக்கல்லூரியிலும் தேர்வுகள் நடைபெற்றன.

மேலும், பட்டக்கல்விக்கான புதிய மாணவர்கள் சேர்க்கை செப்டம்பர் முதலாம் நாளில் இருந்து 15 ஆம் நாள் வரை இடம் பெறும் என்றும் தமிழச் சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்திருந்தது.