தமிழினப்படுகொலை சாட்சியங்கள் பிரான்சு பாராளுமன்றம் முன்பாக நீதி கேட்டுதொடர்கின்றது.

302

இலங்கையில் தமிழினப்படுகொலையின் உச்சம் சிங்கள பேரினவாத அரசாங்கத்தால் அரங்கேற்றப்பட்டு 12ஆண்டுகள் கடந்து அந்த இனப்படுகொலைக்கு ஒரு சர்வதேச சுயாதீன விசாரணப்பொறிமுறையின் மூலம் தீர்வு கேட்டு தமிழர்களின் அறவழிப்போராட்டப்பயணமும் 12ஆண்டு கடந்தும் தொடர்கின்றது.

இந்த 12 ஆண்டுகளில் ஐநா மனித உரிமைப்பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக பொறுப்புக்கூறவைக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோதும் இன்றுவரை இலங்கை சிங்களப் பேரினவாத அரசாங்கம் எந்தவித நீதியையையும் தமிழர்களுக்கு வழங்கவில்லை.எனவே தான் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நாடுகள் அழுத்தங்களை மேற்கொண்டு தமிழினப்படுகொலைக்கு பொறுப்புக்கூறவைக்கும்படி தமிழ் மக்கள் சர்வதேச ரீதியான போராட்டத்தை நடத்திவருகின்றனர்.நாடுகளில் ராஜதந்திர மையங்களை நோக்கி இந்த போராட்டம் பயணிக்கின்றது.

பிரான்சு அனைத்துலக மனித உரிமைச்சங்கம் தமிழ் பண்பாட்டு வலையம் என்பனவும் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி நடத்திவருகின்றன.தமிழினப்படுகொலை சாட்சிகளை சர்வதேசத்தின் மக்கள் பார்வைக்கு வைப்பதன்மூலம் இலங்கை சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் முகத்திரையை அம்பலப்படுத்தி மனச்சாட்சியை உலுப்புவதன் மூலம் நீதிகோரும் போராட்டத்தை நடத்தி வருகின்றது.இன்று அந்த கவனயீர்ப்பு பிரான்சு பாராளுமன்றம் முன்பாக நடைபெற்றுள்ளது.