Jean Jacques FLAHAUT அவர்களின் இறுதிப் பயணம்.

1098

Jean Jacques FLAHAUT அவர்களின் இறுதிப் பயணம்.

Jean – Jacques FLAHAUTஅவர்கள் கடந்த 14.11.2021 அன்று மாரடைப்பால் தனது 64 ஆவது வயதில் சாவடைந்துள்ளார். இவரின் இறுதி வணக்க வழியனுப்பும் நிகழ்வு 19.11.2021 வெள்ளிக்கிழமை ENL4 EGLISE SAINT MARIE Madeleine (3 PL.de L’Eglise 95330 DOMONT தேவாலையத்தில் 14.30 மணிக்கு திருப்பலிப்பூசை ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் cimetiere de de MONTLIGNON மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது Jean – Jacques FLAHAUT அவர்கள் 2005 காலப்பகுதியிலிருந்து கேணல் பரிதி அவர்களினால் அறியப்பட்டவர் நல்ல நண்பராகவும் இருந்தவர். ஐனீவா நோக்கிய எமது தொடரூந்துப் பயணம் பல்வேறு தடைகளைத்தாண்டி பயணிக்க உதவியாகச் செயற்பட்டதோடு மட்டுமல்லாது 2 தடவைகள் nஐனீவா நோக்கிய பேரணியிலும் தமிழ் மக்கள் எம்முடன் இணைந்து பங்கெடுத்தவர். அத்துடன் மாவீரர்நாள் எமது தேசம் நோக்கிய நிகழ்வில் இவரின் பிரசன்னம் இருந்து கொண்டு இருப்பதுடன் எமது மத்தியில் ஒரு பிரெஞ்சு நட்பு வட்டத்தையும் ஏற்படுத்தித் தந்தவர். எல்லா நாட்டவர்கள் மீது கொண்ட நல்ல மனிநேயம் இவரின் சட்டரீதியான தொழில், செயற்பாடுகள் இவர் அதிகம் நம்பியவர்கள் செய்த செயற்பாடுகள், சிறிது காலம் இவர் சட்டச்சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு சென்றிருந்தது. ஆனாலும் ஈழத்தமிழ் மக்கள் மீது இவர் கொண்ட பற்றும், நம்பிக்கையும் இவர் இறக்கும் வரை இவரின் உதவிகளும் செயற்பாடுகளும் இருந்து கொண்டேதான் இருந்தது.அவருடைய இறுதி வழியனுப்பும் நிகழ்வில் பல தமிழ்மக்கள் கலந்து கொண்டு கண்ணீர் சிந்தியதுடன் கதறியழுதனர். குழந்தைகள் பெரியவர்கள் அந்நாரின் சடங்கில் கலந்து கொண்டனர். இன்று எம்மவர்களுக்கு ஏதோவொரு சிறிய உதவியை சட்டரீதியாக செய்வதற்கு எம்மவர்கள் பின்நிற்கின்ற வேளை அவர்களின் துன்பநிலை அறிந்து இலவசமான சட்ட ஆலோசனைகளையும், சட்டரீதியான வாதாட்டங்களையும் நிகழ்த்தி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர். அவருடைய எண்ணம் பேச்சு உதவிகள் எல்லாம் தமிழ்மக்களை நோக்கியும் அவர்களுக்கு மட்டுமாகவே இறுதிவரை இருந்திருக்கின்றது. அதுமட்டுமல்ல தமிழ் இளையவர்களுக்கு உலக நடப்புக்களையும், பிரான்சு சட்ட நுணுக்கங்களையும் ஆலோசனைகளையும் வழங்கியதோடு எமது தேசியதலைவர் மீது அளவில்லாத பக்தி கொண்டவர் எங்குமில்லாதவாறு இவரது காரியாலையத்தில் தனது தலைக்கு மேலே தமிழீழத்தேசியத் தலைவரின் திருவுருவப்படத்தை மாட்டி வைத்திருந்தவர். எம்மையும், எமது மக்களை நேசிக்கின்ற இப்படியானவர்களின் பிரிவானது இந்தக்காலத்தில் மிகுந்த துயரினைத் தருகின்றது. இவரின் பிரிவுத்துயரில் நிற்கும் துணைவி, பிள்ளைகள் , நண்பர்களுடன் பிரான்சு வாழ் தமிழ்மக்கள் நாமும் துயர் பகிர்கின்றோம்.