பின்லாந்து நாட்டின் தூதுவர் யாழ் மாநகர பிதாக்கு இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

147

பின்லாந்து நாட்டின் தெற்காசியாவிற்கான தூதுவர் திரு. ஹன்னு ரிப்பட்டி னுக்கும். யாழ் மாநகர பிதா மணிவண்ணனுக்கு இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இச் சந்திப்பின் போது யாழ் மாநகர பிதா இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்தேறிய இனப்படுகொலைக்கு ஒரு நீதியான ஒரு தீர்வொன்றை பெற்றுத்தருவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று கோரியிருந்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு உதவ முன்வருகின்ற நாடுகள் மற்றும் அமைப்புகள் தமிழர்களின் உரிமைசார் பிரச்சினைகளுக்கு நீதியை பெற்றுத்தரும் வகையில் அழுத்தங்களை கொடுத்து இலங்கை தீவில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வொன்றை பெற்றுக் கொடுப்போமென்று இலங்கை அரசு உறுதியளிக்கும் பட்சத்தில் மட்டுமே இலங்கைக்கான நிதி உதவி மற்றும் ஜிஎஸ்டி வரிச்சலுகை ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அத்துடன் அழிவுற்ற எங்களுடைய மக்களின் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்ப உதவ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பின்லாந்தின் தெற்காசியாவுக்கான தூதுவர் இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பில் நாங்கள் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்போம் என தெரிவித்தார். தற்போது தான் புதிதாக இப்பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருப்பதால் தங்களின் மூலம் பல விடயங்களை அறிந்து கொண்டிருப்பதாகவும் இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் உடன் இது தொடர்பில் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் உறுதி அளித்தார்.

திரு. ஹன்னு ரிப்பட்டி அவர்கள் பின்லாந்து நாட்டின் தெற்காசியாவிற்கான தூதுவராக பதவியேற்று ஐந்து நாட்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில் அவர் சந்தித்த முதல் ஆசிய நாடுகளுனுடனான சந்திப்பாகவும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகளுடனான முதல் சந்திப்பாகவும் இச் சந்திப்பு அமைந்திருந்தது.