யாழ் நகர பிதா மணிவண்ணன் அவர்களோடு மக்கள் சந்திப்பு பிரான்சில் நடைபெற்றது.

537

யாழ் நகர பிதா மணிவண்ணன் அவர்களோடு மக்கள் சந்திப்பு பிரான்சில் நடைபெற்றது

பிரெஞ்சு நாட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு யாழ் நகர பிதா மணிவண்ணன் அவர்களோடு திரு. பார்த்திபன் மற்றும் மயூரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
முதல் நிகழ்வாக மங்கள விளக்கேற்றி ஒன்று கூடல் தொடங்கியது இலங்கை பழைய மாணவர் சங்கத் தலைவர் திருவாளர் பாஸ்கரன் அவர்கள் மங்கள விளக்கினை ஏற்றி வைத்தனர் அவரைத் தொடர்ந்து இலங்கை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் நாதன் அவர்கள் மங்கள விளக்கினை ஏற்றி வைத்தார்
பிரெஞ்சு வாழ் மக்கள் கலந்து கொண்டு பல கேள்விகளை தொடுத்தார்கள் அனைத்து கேள்விகளுக்கும் நகர பிதா பொறுமையுடன் பதில் அளித்திருந்தார்

அங்கு வருகை தந்திருந்த மக்களுக்கு ஏற்பாட்டாளர்கள் சிற்றுண்டி வழங்கினார்கள் அதன் பின்னர் நகர பிதா மணிவண்ணனோடு நிழல் படங்களையும் அனைத்து மக்களும் எடுத்துக்கொண்டனர்