பிரான்சில் தமிழீழத் தேசியக்கொடிக்குத் தடைவிதிக்கமுடியாது என்ற சட்டநடவடிக்கை அவசியம். அதேவேளை, மக்கள் தீர்ப்பாயத்தை ஒழுங்கு செய்வோருக்கு உதவுங்கள்….

120

பிரான்சில் தமிழீழத் தேசியக்கொடிக்குத் தடைவிதிக்கமுடியாது என்ற சட்டநடவடிக்கை அவசியம். அதேவேளை, மக்கள் தீர்ப்பாயத்தை ஒழுங்கு செய்வோருக்கு உதவுங்கள்….

பிரான்ஸ் காவல் துறை தமிழீழத் தேசியக் கொடியை பிடிப்பதற்கு தடைவிதித்தது…. மே 18 முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில் பேரணி நடைபெற்ற போது பிரான்ஸ் காவல் துறை தமிழீழத் தேசியக் கொடியை பிடிப்பதற்கு தடைவிதித்தது. அதே நேரத்தில் கொடியை பிடிப்பதற்கு எதற்காக தடை என்று மக்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பிரான்ஸ் காவல் துறை கூறியது தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி அதனால் தங்கள் தடை செய்கின்றோம் என்று. அதற்கு மக்கள் கேள்வி எழுப்பினார்கள். இவ்வளவு காலமும் நாங்கள் இந்த கொடியை பிடித்தோம். இந்தக் கொடிக்கும் விடுதலைப்புலிகளின் கொடிக்கும் வித்தியாசம் உள்ளது என்று மக்கள் வாதிட்டார்கள். காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கு நேற்றைக்கு தடை செய்யக் கூறி அனுமதி கிடைத்ததாக கூறியுள்ளனர் அதன் பின்னர் பிரான்ஸ் காவல் துறையின் வேண்டுகோளை ஏற்று தேசியக் கொடியை பேரணியில் பிடிப்பதை நிறுத்திவிட்டு பேரணி தொடர்ந்தது. பேரணியின் ஏற்பாட்டாளர்கள் தாங்கள் பிரான்ஸ் நீதித்துறையின் ஊடாக அனுமதி பெறவிருப்பதாகத் தெரிவித்தனர்..
ஜெர்மனியில் நடைபெறும் தீர்ப்பாயத்துக்கு அன்பளிப்பு செய்ய விரும்புவோர் ஏற்பாட்டாளர்களின் இந்த வங்கி கணக்குக்கு அன்பளிப்பை செலுத்தலாம்..
Account Name: IMRV Bremen e.V
IBAN: DE77 2001 0020 0009 9292 07
SWIFT or BIC code: PBNKDEFF
Postbank Hamburg
Domsheide 15, 28195 Bremen Germany

www.gofundme.com/f/the-peoples-tribunal-on-sri-lanka-germany