பிரான்சு அரசிடம் சட்டரீதியாக நாடி உள்ளோம். தமிழீழ மக்கள் பேரவை . திருச்சோதி..

811

பிரான்சு அரசிடம் சட்டரீதியாக நாடி உள்ளோம். தமிழீழ மக்கள் பேரவை . திருச்சோதி

பிரான்சு நாட்டு காவல்துறை அதிகாரியிடம் தமிழீழத் தேசியக்கொடி தவிர்க்கப்பட்டதற்க்குரிய காரணம் சட்டத்தரணிகள் ஊடாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்குரிய பதில் கிடைக்கும் வரை தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு. எந்த நடவடிக்கையும் தற்போது எடுக்கத் தயாரில்லை..

இந்த நாட்டில் எங்கள் பிள்ளைகள் தொடர்ந்து வாழத்தான் போகின்றார்கள் இந்த விடயத்தை கருத்தில் கொண்டு பிரான்சு அரசிடம் தார்மீக எங்கள் உரிமையை சட்ட ரீதியாகத்தான் பெற்றெடுக்க முடியும். நாம் இந்த நாட்டில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக தொடர்ந்து பணியாற்றிவருகின்றோம்.

இந்த நாட்டை நாம் பகைக்க விரும்பவில்லை சட்டரீதியாக எங்கள் உரிமையை பெற்றெடுக்க நாடி உள்ளோம். அதற்காக காத்திருக்கின்றோம் உணர்ச்சிவசப்பட்ட அரசியலை நாம் செய்யவில்லை புத்திசாலித்தனமான அணுகுமுறையை கையாண்டுஉள்ளோம் எமக்கு நிச்சயமாக இந்த நாடு எங்களுக்கு உரிமையை தரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம்.

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு. திரு. திருச்சோதி