வில்நெவ் சென்ஐர்ச் பிராந்திய நகரசபையின் பிரதிநிதி Laurent saint Martin அவர்களுடனான 2 ஆம் கட்டச்சந்திப்பு நடைபெற்றது.

192

வில்நெவ் சென்ஐர்ச் பிராந்திய நகரசபையின் பிரதிநிதி Laurent saint Martin அவர்களுடனான 2 ஆம் கட்டச்சந்திப்பு நடைபெற்றது.

பிரான்சு வில்நெவ் சென்ஐர்ச் பிராந்திய நகரசபையின் பிரதிநிதி Laurent saint Martin அவர்களுடனான 2 ஆம் கட்டச்சந்திப்பு 10.06.2022 இன்று நடைபெற்றது.

கடந்த 8 ஆம் நாள் இவரின் உதவியாளருடனான நடைபெற்ற சந்திப்பை தொடர்ந்து இந்நதச்சந்திப்பு அவரின் வேண்டுகோளுக்கு அமைய 10.06.2022 காலை 10.30 மணிக்கு அவர்களுடைய அலுவலகத்தில் ஏற்பாடாகியது. வில்நெவ் சென்ஐர்ஐ; பிராங்கோ தமிழ்ச்சங்கத்தலைவர் திரு. தினேஸ் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு. பாலகுமார் அனைத்துலக மனித உரிமை சங்கம் பொறுப்பாளரும் திரு. கஐன் அவர்களும் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

ஏற்கனவே நகரசபையின் பிரதிநிதியின் உதவியாளரிடம் தமிழ் மக்கள் எமது தரப்பால் முன்வைக்கப்பட்ட விடயங்களை தான் அறிந்து கொண்டதாகவும் அதுபற்றி இன்னும் விரிவாக அறிந்து தமிழ் மக்களுக்கு உதவிடுவகையில் இங்கு வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும் அமைப்பாகவும் பணியாற்றுகின்ற பிராங்கோ தமிழ்ச்சங்கத்தையும் அதன் செயற்பாடுகளுக்கும் தான் என்றும் உதவுவேன் என்றும் தமிழீழ மக்களின் பொதுவான தேவையை விடயத்தை தானும் பிரெஞ்சு அரசியலுக்கும் பாராளுமன்றத்திற்கும் எடுத்துச்செல்வேன் என்றும் உறுதியளித்திருந்தார்.

தமிழ்மக்களின் தொடர் அரசியல் பிரச்சனையை தான் அறிவேன் என்றும் அதிகாரத்திற்கு தான் வரும்வேளை அதற்காக தன்னால் பூரணமாக உதவமுடியும் என்றும் தெரியப்படுத்தினார்; பிரான்சு நாட்டின் தற்போதைய அதிபர் இமானுவேல் மக்குரோன் அவர்களுடைய கட்சியின் வேட்பாளராக பிரதிநிதி Laurent saint Martin அவர்கள் 2022 பாராளுமன்றத்தேர்தலில்

( யூன் 12 மற்றும் 19 ஆம் நாள் ) இவர் போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தேர்தல் உச்சப்பரப்புரைக்கும் பணிக்கும் மத்தியில் தமிழர் தரப்பை அழைத்து ஒரு மணிக்கு மேலாக உரையாடியமை கலந்து கொண்ட தமிழர் எம் தரப்பில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.


எம்மையும் எமது உணர்வுகளையும் எதிர்கால எமது சமுதாயத்தின் தேவைகளை தெரியாதவர்களை எமது தேர்தல் வாக்குகளால் தெரிவு செய்வதைவிட எம்மை தெரிந்தவர்களை புரிந்தவர்களை மனிதநேயத்துடன் எம்மை அனுசரித்து ஆதரவு தருபவர்களை ஆதரிப்பதே எமக்கான ஒரே தெரிவாகவும் இருக்கின்றது.

இது பிரான்சின் அனைத்துப் பிரதேசம் வாழ் வாக்களிக்கும் உரிமை கொண்ட தமிழ்மக்கள் புரிந்து கொள்வார்கள் ஏற்றும் கொள்ளவேண்டியதொரு விடயமாகவே இந்த தேர்தல் அமைந்திருக்கின்றது என்பதே அனைத்து அரசியல் ஆய்வாளர்களின் கருத்தும் ஆலோசனையுமாகவுள்ளது.

இந்தச்சந்தர்ப்பத்தை 2022 ல் தவறவிடும் நாம் அரசியல் தெளிவு பெற்று மீண்டும் எமது கடமையை செய்ய இன்னும் நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டும். இந்த காலத்தில் எதிர்பாராது எத்தனையோ விடயங்கள் நடந்து தேறிமுடிந்துவிடும் எனவே காலத்தை அறிந்து பயிர்செய்து பயனை அடைவோம். நன்றி ஊடகப்பிரிவு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு