ஈழத்து கிரிமலை. சுவிஸ் லவுசான் மாநிலத்தில்.

159

சுவிஸ் நாட்டில் லவுசான் மாநிலத்தில் சைவமதம் . மற்றும் இந்துக்களின் மரணச்சடங்கு கிரிகைகளான நடாத்துவதற்கு அனுமதி வழங்கி உள்ளது.

லொசான்,ஒலிம்பிக் தலைநகர்,சுவிற்சலாந்து.தம்பிப்பிள்ளை நமசிவாயம். மாநகர மூத்த உறுப்பினர் லொசான்  சுவிற்சலாந்து.

சனிக்கிழமை 25/6/2022அன்று காலை 10 மணிக்கு காவற் துறை அமைச்சர் திரு.Pierre-Antoine Hildbrand அவர்கள் வருகை தந்தார்.அவரை வரவேற்று வணக்கம்சொல்லி கணபதி பூசை ஆரம்பமானது.கணபதி வழிபாட்டை தொடர்ந்து  குருக்கள்  பிரதம விருந்தினருக்கு தலையில்பட்டுக்கட்டிதொடர்ந்து மாநகர உறுப்பினர் தம்பிப்பிள்ளை நமசிவாயம் அவர்களுக்கு பட்டுக்கட்டி மாலைகள் முறையேHildBrand அவர்களுக்கும் திரு த.நமசிவாயம் அவர்களுக்கும் உருவாகும் புதிய கோவில் தலைவரான திருசிவஞானம் குகநேசன் அவர்களுக்கும் அணிவித்து ஆசிஉரை சொன்னார்.நமசிவாயம் அவர்கள் ஆற்றில்  ஏன் அஸ்தி இடுதல் என்பது பற்றி விளக்கங்கள் கூறினார்.சிவன்அம்பாளை  ஆவாஹனம் செய்து வழிபாடாற்றிய கும்ப நீரினால் புரோகிதர் ஆற்றில் இறங்கி ஆற்றில் கும்பத்தை சொரிந்து  கங்கையை புனிதப்படுத்தினார். பிரதம விருந்தினருக்கு த.நமசிவாயம் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். விபூதி பிரசாதம் கொடுக்கப்பட்டு பின்னர் எல்லோரும் கௌரவிக்கப்பட்டனர்.

வெற்றிலையில் பழம் சில்லறைகள் வைத்து ஆற்று நீர் விட்டு Antoine அவர்கள் எமதுவிளக்கங்களை ஏற்று  த.நமசிவாயம் மாநகர உறுப்பினர் அவர்களிடம் இந்த இடத்தை மாநகராட்சி ஒப்படைக்கின்றது என்று கரகோஷத்து மத்தியில் சொல்லிக்கொடுத்தார்

வருகை தந்த எல்லோருக்கும் நன்றி கூறுகின்றோம்
இரசாயன விஞ்ஞானி மதுரையம்பதியை சேர்ந்த தமிழ் ஆர்வலர் திரு .கல்யாணசுந்தரம் அவர்கள் தம்பாரியார் சகிதம் வருகை தந்தது மட்டுமல்ல ஸ்லோகங்கள் பல பாடி சிவனை அங்கு பிரத்தட்சணமாய் உலாவச் செய்தது பக்தர்களுக்கு பெரும் வியப்பை ஊட்டியது.
தண்டாயுதபாணி சடான்னசர்மா அவர்கள் பூசைகளை செவ்வனே நடாத்தி வைத்தார்