ஐ.நா தலைவர்களுக்கு அடைச்சிருக்கிற காது திறக்கும் வரையும் நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம்: ம. கஜன்.

619

ஐ.நா தலைவர்களுக்கு அடைச்சிருக்கிற காது திறக்கும் வரையும் நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம்: ம. கஜன்.

ஜெனிவா ஐக்கிய நாடுகள் முன்றலில் தமிழ் இன அழிப்புக்கு நீதி கோரி குரல் எழுப்பிய அனைத்துல மனித உரிமை சங்கத்தின் ஒருக்கிணைப்பாளர் ம. கஜன்.
(காணொளி இணைக்கப்பட்டுள்ளது).

அனைவருக்கும் வணக்கம்.
தாயகத்திலிருந்து வந்தவர்கள் அதாவது 6ம் தடைச்சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் சாரந்த சில விடயங்களை இங்கு பேச முடியாது. அவர்கள் பேசினால் அங்கு (இலங்கை) போக முடியாது. இது இலங்கை அரசின் எழுதப்படாத சட்டம். ஆனால் அங்கு நடைமுறையில் உள்ள விடயம். அதன் காரணமாக சில விடயங்களை நாங்கள் இங்கு தவிர்த்திருக்கின்றோம்.

அதற்க்கு அப்பால் இன்று பார்த்தீர்களேயானால் பத்து வருடங்களாக இந்த இடத்திலே இனப் படுகொலைக்கு நீதி கோரி இங்கு இருக்கின்றோம்.
இங்கே பார்த்தீர்களாகயிருந்தால் இந்த கரையிலே மதத்தலைவர்கள் மற்றப்பக்கம் எங்களுக்காக அரசியல் ரீதியாக நின்று நேர்மையாக குரல் கொடுத்த வீதிகளில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட எங்களுடைய அரசியல் தலைவர்கள்,

இங்கே பார்த்தீர்களேயானால் நேர்மையாக உழைத்த எங்களுடைய ஊடகவியலாளர்கள் வரிசையில் குவிக்கப்பட்டிருக்கன்றது நீங்கள் பார்த்தால் தெரியும்.

அதற்கப்பால் மாணவரகள் குழந்தைகள் என பல பேர்கள் இங்கு இரத்தமும் சதையுமாக அள்ளிவைத்து நீதிக்காக பத்து ஆண்டு காலமாக இந்த இடத்தில் தவமிருக்கின்றோம்.

இந்த முறை தாயகத்திலிருந்து பெரியதொரு திட்டமிட்டிருந்தோம் தமிழ்நாடு ஐரோப்பா நாடுகள் ரீதியாக இதிலே ஆனந்தி சசிதரன் அம்மையார், கணேஷ் தம்பி எல்லோரும் சேர்நது திட்டமிட்டு கடுமையான பொருளாதார நெருக்கடி அங்கிருந்து வரும் விமானச்சீட்டுகள் அதிகமான ஐந்து லட்சம், ஆறு லட்சம் மேலே என பொருளாதார நெருக்கடி தாங்கமுடியாமல் ஒரு குறிப்பிட்டளவில் அடையாளமாக இன்று இந்த இடத்திலே நடந்து வெற்றிகரமாக முன்னேறி இருக்கின்ற சில விடயங்கள் அவர்கள் பேச முடியாது என்பதற்காக இங்கு பாதுகாப்பான இடத்தில் இருக்கிற நாங்கள் எங்களால் பேச முடியும் என்ற அடிப்படையில் வந்து நாங்கள் சில விடயங்களை பேசுகின்றோம்.

எங்களைப் பொறுத்தளவில் எங்கள் தாயகம் தமிழீழம் அந்த தமிழீழத்தை மீட்டெடுப்பதற்காக நாங்கள் தொடர்ச்சியாக போராடுவோம். இந்த ஐரோப்பிய நாடுகளாக் இருந்தாலும் சரி இந்த ஐக்கிய நாடுகளாக இருந்தாலும் சரி இந்தியாவாக இருந்தாலும் யாராக இருந்தாலும் சரி எங்களது கோரிக்கை வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்பது தமிழீழம் என்பது. நான் பேசுவது என்னுடைய சொந்தக்கருத்து.

இங்கு வந்திருக்கும் அரசியல் தலைவர்களோ, தாயகத்திலிருந்து வருகை தந்தவர்களோ அவர்கள் இதற்கு பொறுப்பல்ல. ஏன் என்றால் அவர்கள் அங்கு வாய் கட்டப்பட்டு கை கட்டப்பட்டு இன்று அவர்கள் ஒரு நடமாடும் அடிமை அரசியலாக இருக்கின்றார்கள். இங்கு பேசினால் விமான நிலையத்தில் அவர்கள் போக முடியாது. அவர்கள் அங்கு கைது செய்யப்படுவார்கள்.

ஏன் என்றால் பசிக்காக போராடியவர்களை சிறையில் போட்ட அரசியல் தலைவர்தான் இன்று இருக்கின்றவர். இவர்களும் அங்கு சென்று ஏதாவது பேசினால் ஒங்வொரு வார்த்தைகளும் இவர்கள் பேசும்போதும் பார்த்து பார்த்து பேச வேண்டும். ஆனால் நாங்கள் இந்த சுதந்திர நாட்டிலே இருக்கின்றோம்.நாங்கள் தாராளமாக பேசலாம்.

நாங்கள் எங்களை பொருத்தவரை எங்களது விடுதலை கிடைக்கும் வரை நாங்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம். எங்களுக்கு வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் தமிழீழம் என்ற கோரிக்கையோடு போராடிக் கொண்டு இத்துடன் இந்த மேடைகளை பிரான்சிலிருந்து தந்தவர்களும் இந்த ஒலிவாங்கிகளை கொண்டு வந்த எல்லோருக்கும் நன்றியை கூறிக் கொண்டு உங்களிடமிருந்து விடைபெறுகின்றோம். மீண்டும் நாங்கள் தொடர்ந்து வருவோம். எங்களுடைய விடுதலை கிடைக்கும் வரை இந்த இடத்திலே குரல் ஒலிக்கும்.

இரண்டு பேர் இதிலே வீரச்சாவடைந்திருக்கிறார்கள். தொடர்ந்தும் இந்த இடத்திலே எங்கள் உயிர்மூச்சு இருக்கும் வரை எங்களுடைய விடுதலை கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம்.

இந்த ஐ.நாவின் காது கேட்கும் வரை. இந்த ஐ.நா தலைவர்களுக்கு அடைச்சிருக்கிற காது திறக்கும் வரையும் நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம்

என்று கூறிக்கொண்டு உங்களிடமிருந்து தற்காலிகமாக மீண்டும் வருவேன் தற்காலிகமாக விடை பெற்றுக் கொள்கின்றேன்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
வெல்வது உறுதி.