வன்னிமக்கள் அனைவரும் நான் கும்பிட்டு கேட்டுக்கொள்றன் எப்பிடியாவது அந்த அரக்கனிட்ட இருந்து எங்கட இடத்தை நீங்க மீட்டுத்தாங்க

501

வன்னிமக்கள் அனைவரும் நான் கும்பிட்டு கேட்டுக்கொள்றன் எப்பிடியாவது அந்த அரக்கனிட்ட இருந்து எங்கட இடத்தை நீங்க மீட்டுத்தாங்க

நீங்கள் வன்னிமக்கள் அனைவரும் மன்னித்து நான் கும்பிட்டு கேட்டுக்கொள்றன் எப்பிடியாவது அந்த அரக்கனிட்ட இருந்து எங்கட இடத்தை நீங்க மீட்டுத்தாங்க என்டு சொல்லி கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்றன்.

வன்னி மக்களுக்கு ஒரு வேண்டுகோள். நாங்கள் தலைவர் அண்ணாவுக்காக வன்னி மண்ணுக்காகவும்தான் நாங்கள் அங்க வந்து போராடினம். போராடி எங்கள் உறவுகள் வீரச்சாவு அடைஞ்சது. ஆனால் அளம்பில் துயிலும் இல்லத்தில ஐந்து பேர் அளம்பில் ஆட்கள் தவிர மற்ற எல்லோரும் வெளிமாவட்ட ஆட்கள்தான். அப்ப நாங்கள் உங்களுக்காக அங்க வந்து மடிந்து வீரச்சாவு அடைஞ்ச. உங்களை நம்பித்தானே இதெல்லாம் விட்டிட்டு வந்தனாங்கள். அதனால நீங்கள் வன்னிமக்கள் அனைவரும் மன்னித்து நான் கும்பிட்டு கேட்டுக்கொள்றன் எப்பிடியாவது அந்த அரக்கனிட்ட இருந்து எங்கட இடத்தை நீங்க மீட்டுத்தாங்க என்டு சொல்லி கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்றன்.

போரதீவு பற்று பிரதேசத்தில இருந்து தயாளினி கதைக்கின்றன். அளம்பில் துயிலுமில்லத்தில எங்கட அக்காட உடலும் தம்பிட உடலும் விதைக்கப்பட்டிருக்கு. அக்காட பெயர் லெப்டினன் எழில். வீட்டுப் பெயர் கிரிஜா. தம்பிட பெயர் அகழரசன்.
அதாவது பூட் சிற்றிக்கும் மலசலகூடத்திற்கும் இடையில அக்காட வித்துடலும், அதற்கு பின்புறம் தம்பிட வித்துடலும் விதைக்கப்பட்டிருக்கு.
இப்ப நாங்கள் எங்க வந்து விளக்கு ஏத்திற?.

விதைக்கப்பட் இடத்தில நீங்கள் மலசலம் கழிக்கப் போறீங்க?. அப்ப நாங்கள் என்ன செய்யிற?. நாங்கள் எங்க வந்து விளக்கேத்திற?. நீங்கள் தமிழனா இருந்துகொண்டு விதைக்கப்பட்ட இடத்தை தோண்டி இப்பிடி பூட் சிற்றி கட்டினது நியாயமா?. உங்களுக்கு இடம் வேணும் நீங்கள் தொழில் செய்ய வேணும் என்டு சொன்னா. நீங்க சொன்னீங்க துயிலுமில்லத்தை பாதுகாக்க வேணும் என்டு சொல்லி. பாதுகாக்க வேணும் என்டு சொல்லிற்று நீங்க எதாவது சான்றிதழ் வைச்சு பாதுகாத்திருந்தால் ஒரு பிரச்சினை இல்லை. ஆனால் நீங்கள் என்ன செய்திருக்குறீங்க?.

பூட் சிற்றி கட்டியிருக்குறீங்க. வித்துடலை தோண்டி எடுத்திட்டு மலசலகூடம் கட்டியிருக்குறீங்க. இது நியாயமா?. உண்மையிலேயே நீ ஒரு தமிழனா?.

நான் கேட்கிறேன் ஒரு வார்த்தை உண்மையிலேயே நீ ஒரு தமிழனா?. வெட்கமா இல்லையா?. உண்மையிலேயே ஒரு ஒழுங்கான தமிழன் என்டு சொல்லி சொன்னா, மாவீரர் என்டு சொன்னா உலகம் முழுக்க போற்றுது. போராடின மதிப்பு வருது. அப்ப நீங்கள் என்ன செய்திருக்குறீங்க?.

துயிலும் இல்லம் என்டு தெரிஞ்சும் கூட பாதுகாக்கிறன் என்டு சொல்லி. அளம்பில் மக்களுக்கும் துளி கூட வெட்கமில்லை. இப்பிடி ஒரு துயிலுமில்லம் இருக்கிற இடத்தில யாராச்சும் இப்பிடி கட்ட விடுவாங்களா?. இங்க இருக்கிற எங்களுக்கே உதிரம் வெடிக்குது அங்க இருக்கிற உங்களுக்கு எப்படி இருக்க வேணும்?. அந்த இடத்தை வாங்கி இப்பிடி செய்யிறத்துக்கு அவனை நீங்க விட்டிருக்கலாமா?.


நான் இப்ப போனதரம் 17ம் திகதி நாங்க முன்னூற்றைம்பது 350 பேர் வந்தம். அடுத்ததரம் போராட்டத்திற்கு ஆயிரக்கனக்கான பேர் ஒவ்வொரு மாவீரர் குடும்பத்துக்கும் சொல்லுவம் எந்த இடமென்டாலும் நாங்கள் சொல்லி எப்பிடி கஷ்ரப்பட்டாவது நாங்கள் கூட்டிக்கொண்டு நாங்கள் வந்து உடைப்பம். பூட்சிற்றி தூளாதான் போகும்.