மாவீரர் குடும்பமும் வந்து உன்ட கடைய உடைச்சு நாங்கள் அந்த காணிய எடுக்க எங்களால ஏலும்.

438

மாவீரர் குடும்பமும் வந்து உன்ட கடைய உடைச்சு நாங்கள் அந்த காணிய எடுக்க எங்களால ஏலும்.

ஓம் பிரபா, அந்த கல்லறையை உடைச்சு என்னமேன காணிய போட்டிருக்கிறாய்?. உன்ட பிள்ளையளை கொண்டே போட்டதுக்கு சரி நீ அந்த காணிய உடைச்சுக் கொண்டுபோய் போட்டது. நீ என்ன உன்ட மனசாட்சி இருந்தே கொண்டுபோய் போட்டனி?. நீ அந்த கட்டங்களை உடைச்சுக் கொண்டுபோய் வேற காணிக்குள்ள அகற்றி போட்டிருக்கிறியே உனக்கு மனசாட்சி இருக்கோ?. அந்த பிள்ளையளை விதைச்ச உடல் எல்லே அதுக்க. உன்ட பெண்சாதி பிள்ளையளை தாட்ட மாதிரித்தான் அது கிடந்த. நீ உன்ட பெண்சாதி பிள்ளையள இரக்கமில்லாத மாதிரி அந்த பிள்ளையள கொண்டுபோய் வேற இடத்தில போட்டிருக்கிறியே. மனசாட்சி இருந்தால் அதை இன்டைக்கே விட்டுக்குடு. இது விரைவில செய்யிற வேலை பேந்து வீண் பிரச்சினைக்கு உருவாக்காத. மாவீரர் குடும்பம் என்றது சக்கட்டை இல்லை. நாங்கள் எல்லாம் செய்வம். எங்கட பிள்ளையள் போன மாதிரி நாங்களும் போக தயாரா இருக்கிறம் இந்த காணி ஒன்டால. இதை கட்டாயம் விரைவில விடவேணும்.

நான் ஒரு மாவீரர் குடும்பம் அம்மாதான் கதைக்கிறன். எனது மகன் முள்ளியவளை துயிலுமில்லத்தாலதான் விதைக்கப்பட்டிருக்கிறார். அதேபோல அளம்பில் துயிலுமில்லம் நடந்து கொண்டிருந்ததை இன்டைக்கு நீங்கள் அந்த காணியை பிடிச்சு கடைகட்டி பெரிய இதுகள் எல்லாம் செய்து கொண்டிருக்குறீங்கள். அண்டைக்கு நாங்கள் முன்னூற்றைம்பது 350 பேருக்கு கிட்ட அந்த காணிப் பிரச்சனைக்கு அங்க வந்தனாங்கள் ஆர்ப்பாட்டத்துக்கு. அப்பொழுது நீங்கள் சொன்னது என்ன என்டு சொன்னால் இவ்வளவு காசோட நாங்கள் இந்த காணியை விடுறம் என்டு. அப்ப நாங்கள் ஆர்ப்பாட்டம் எதுவும் நடவாமல் அந்த காணி ஓம் என்டதுக்கு திரும்பி வந்திட்டம். அதேபோல இப்ப பேந்து திரும்ப நிக்குறியல் வெளிநாட்டில நிண்டுகொண்டு உங்களுக்கு காசு பலன் ஆட்பலன் இருந்தபடியால் அந்த காணிய இப்ப திரும்ப இல்லை என்டு சொல்லி நிக்கிறீங்கள். அந்த காணியை அந்த பொதுமக்களுக்காகவும், அந்த கதைச்ச அத்தனை பேருக்காகவும் மன்னிச்சு அந்த காணியை விடோணும். அந்த துயிலுமில்லம் திரும்ப கட்டி எழுப்போணும். அதைவிட அந்த துயிலுமில்ல கட்டிடங்களை உடைச்சு இன்னுமொரு காணிக்க பொண்டுபோய் அகற்றி இன்னுமொரு கிணத்தில போட்டிருக்குறீங்கள். அந்த கிணத்தில போட்டதெல்லாம் அகற்றி நாங்கள்தான் இனி செய்ய வேணும். இந்த மாவீரர் இருந்தபடியால்தான் இன்டைக்கு உயிரோட நீங்கள் வெளிநாட்டுக்கு போன இன்டைக்கு அந்த பிள்ளையளை யோசிச்சு பாருங்கோ அந்த கட்டிடத்தை நாங்கள் எடுத்து கட்டியிருக்கலாமோ என்டு. நீங்கள் பாதுகாப்பா வைச்சிருந்தால் அதை மன்னிக்கலாம். அப்பிடி இல்லை நீங்கள் குடுக்கேல்லை என்டு சொன்னால் உலகமே திரண்டு உங்கட இடத்தை உடைச்சு துயிலுமில்லம் கட்டுவம் என்டது உறுதியான கதை. நான் ஒரு மாவீரர் அம்மா என்ட படியால் உன்னை மன்னிச்சு கேட்கிறன். அந்த காணியை குடையா. அந்த காணிய விட்டாத்தான் அந்த பிள்ளையளின்ர வித்துடல் நாங்கள் திரும்பியும் செய்ய. உன்னை மன்னிப்பா கேட்டு கேட்குறன் அந்த காணிய குடு. நீ இப்ப பிடிச்ச காணிக்குள்ள மாவீரர் துயிலுமில்லம் இருந்த காணிக்குள்ள நாற்பத்தேழு 47 வித்துடல் தாட்டிருக்கு. உன்ட சகோதரமே சொல்லுது அதுக்குள்ள தாட்டது உண்மைதான் என்டு. உன்ட உறவும் தாட்டிருக்கு. உன்ட உறவேம் தாட்ட இடத்தை பேந்தும் ஏன் நீ பிடிச்சுக் கொண்டிருக்கிறாய்?. அந்த காணிய விட்டுத்தா. அந்த இராணுவம் பிடிச்ச காணிய அவன் ஓம் என்டு தாறான். ஏன் நீ விட்டுத்தாறாய் இல்லை. உனக்கு அதில என்ன இருக்கு?. மாவீரர் இப்படி இருக்கிறது உனக்கு சந்தோசமோ?.

அதுகளுக்கான காணியை நீ விட்டுக்கொடுத்து நீ சந்தோசமாய் இருக்கிறதென்டால் நீ அந்த காணிய விட்டுக்குடு. உனக்கு அது நல்ல சந்தோசமாக இருக்கும். உன்ர குடும்பமும் நல்லாயிருக்கும். பிரபா இந்த காணிய விரைவில விட்டுத்தா. அப்பிடி இல்லை என்டு சொன்னா ஆயிரக்கணக்கான மாவீரர்களின் பெற்றோர் வந்து அடிச்சு உடைச்சு அதை எடுப்போம் என்டது உறுதியான பேச்சு. யாற்றையேன் கதை கேட்டு இந்த காணிய வைச்சிருக்காத. அது மாவீரற்ற சொத்து. மாவீரருக்கு உறுதியா அதை குடுத்து சந்தோசமாய் வேற இடத்தில கடையை கட்டி இரு. அந்த காணில நீ எதுவும் செய்ய வேண்டாம். காணிய விட்டுக்குடு. அதுதான் நாங்கள் கேட்க வேண்டிய கதை. நாங்கள் ஒரு மாவீரர் குடும்பம். எங்கட பிள்ளையளை விதைச்ச இடத்தில விளக்கேத்த வழியில்லாம உன்ட கடேலையோ நாங்கள் விளக்கேத்துறது?. நீ இப்பிடி ஒரு காசாசு பிடிச்சனி வேற ஒரு காணிய எடுத்து செய். அதுக்காக மாவீரர் பிள்ளையளை இழந்த காணிய நீ எடுக்க வேணாம். இந்த துயிலுமில்ல கட்டுடங்கள் திரும்பி கட்டினாலும் எவ்வளவு


மனவேதனை. அதில ஒரு விளக்கேத்தலாமோ?. சந்தோசமாய் பெற்றோர் இருக்கலாமோ?. யோசிச்சு பார். நீ அந்த மாவீரர் இருந்தபடியால்தான் வெளிநாட்டுக்குப் போயிருக்கிறாய். உன்ட குடும்பம் இருக்குது. அதுக்காக இந்த பிள்ளையள தாட்ட இடத்தில நீ இப்படி ஒன்டு செய்து போனது பெரும்பிழை. அதை மன்னிச்சு அந்த காணிய குடையா. பிரபா உனக்கு மீண்டும் மீண்டும் சொல்லுறம் பிரபா அந்த காணிய குடு. பேந்து பெரிய பிரச்சினைக்கு உள் வாங்கி அவ்வளவு மாவீரர் குடும்பமும் வந்து உன்ட கடைய உடைச்சு நாங்கள் அந்த காணிய எடுக்க எங்களால ஏலும். இதுதான் உண்மை.