விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் . திருமாவளவன் அண்ணா எங்களை மீண்டும் புதைகுழிக்குள் தள்ளாதீர்கள்

403

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர். திருமாவளவன் அண்ணா எங்களை மீண்டும் புதைகுழிக்குள் தள்ளாதீர்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், அடிப்படை தொண்டர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கமும் அன்பான வேண்டுகோளுமாக உங்களுக்கு இப் பதிவை முன்வைக்கின்றோம்.

முப்பது 30 ஆண்டு காலத்துக்கு மேலாக ஆயுத ரீதியான போராட்டம் நடந்து தமிழீழம் என்ற கோரிக்கையோடு போரட்டம் நடைபெற்றது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

தமிழகத்தில் கூட எத்தனையோ இளைஞர்கள் இந்த தமிழீழ விடுதலைக்காக தீக்குளித்து தங்களையே அர்ப்பணித்தார்கள். இன்றுவரைக்கும் தமிழீழம் என்ற கோரிக்கையோடே போராட்டம் பயணித்துக் கொண்டிருக்கின்றது. அந்த வகையிலே நேற்றையதினம் அதாவது 6 ஆம் திகதி 1 ஆம் மாதம் 2023 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அண்ணா அவர்களும் வன்னியரசு அவர்களும் எங்கள் தேசத்தின் துரோகியாக செயல்படுகின்ற சுமந்திரன் அவர்களை, மலையகத் தலைவர்களையும், இஸ்லாமிய தலைவர்களையும் மற்றும் சில ஊடகவியலாளர்களையும் அழைத்து 13ம் திருத்தச் சட்டம் எனப்படுகின்ற இலங்கை இந்திய ஒப்பந்தம் சம்பந்தமான ஒரு ஊடக சந்திப்பினை நடத்தியிருந்தார்கள்.

நாங்கள் மீண்டும் மீண்டும் தமிழகத் தலைவர்களுக்கும், தமிழகத்தில் வாழ்கின்ற மக்களுக்கும் சொல்லக்கூடிய விடயம் நாங்கள் இன்று வரைக்கும் தமிழீழம் என்ற கோரிக்கை கைவிடவுமில்லை, செத்துவிடவுமில்லை. அது தொடர்ச்சியாக பேசுபொருளாகவும் அதற்குரிய பயணத்தையும் நாங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றோம்.

இந்த 13ம் திருத்தச் சட்டம் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது 1987 ஆம் ஆண்டு காலப்பகுகளிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்ட விடயம். மக்களும் ஏற்றுத்தான் அதற்காக போராடினார்கள். அந்த 13 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் இலங்கை இந்திய ஒப்பந்தத்தால் பல பெண்கள் இந்திய இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டார்கள், எத்தனையோ மக்கள் ஊனமுற்றார்கள், இன்னும் பல பேர் தமது உறவுகளை இழந்தார்கள். இந்திய இராணுவத்தினால் பாதிக்கப்பட்டு காலை இழந்தவரகள் இன்றைக்கும் பிரான்சு நாட்டில் வாழ்கின்றனர்.

அதேநேரம் இந்த 13ம் இலக்க திருத்தச் சட்டம் வலியுறுத்துகின்றார்கள் என அன்று இந்திய இராணுவத்தினருடன் வந்த வரதராஜபெருமான், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளட் போன்ற இந்த கட்சிகள்தான் இன்றும் இந்திய அரசுடன் சேர்ந்து வலியுறுத்துகின்றனர். தமிழீழ விடுதலையை நேசிக்கின்ற ஒருவர் கூட இந்த 13 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தை இன்றுவரைக்கும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த சட்டம் ஒரு செத்த விடயம் போன்றது. இந்த செத்த ஒரு விடயத்தை திருமாவளவன் அண்ணா திரும்ப தோண்டி எடுத்து நேற்று பேசுபொருளாக ஆக்கியது எங்களுக்கு வேதனையை தந்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றோம் உங்கள் தலைவரிடம் எடுத்துக் கூறுங்கள் நாங்கள் தமிழீழம் என்ற நிலைப்பாட்டுடன்தான் நிற்கின்றோம். ஏன் 2009 ஆம் ஆண்டு கூட சோனியா காந்தி அரசுடன் சேர்ந்து திருமாவளன் அண்ணா சென்று மகிந்த ராஜபக்‌ஷ அவர்களை சந்தித்தார், அவருக்கு கை குழுக்கினார்.

அதேநேரம் பரிசுக்கு அவர் வந்த போது அவர் கேட்டார் சரி அது முடிந்துவிட்டது. ஆனால் திரும்பவும் அதே தவறுகளை திருமாவளன் அண்ணா தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நான்காம் மாதம் மாநாடு ஒன்று ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பால் நடத்தப்பட்டது. அதில் தனி தமிழீழம்தான் தீர்வு என்றும் 13 ஆம் இலக்க திருத்தச் சட்டம் இல்லை என்றும் அங்கு கூறப்பட்டது.

பின்பு தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற ஒவ்வொரு மாநாட்டிலையும், கூட்டத்திலும் நாங்கள் தமிழீழம்தான் முடிவு என்பதில் ஆணித்தரமாக நிற்கிறோம்.

இந்த 13 ஆம் திருத்தச் சட்டத்துக்குள்ளே மீண்டும் மீண்டும் திருமாவளவன் அண்ணா கை நனைப்பது நீங்கள் கடந்து வந்த பாதையை பின்னர் இன்றைக்கு யாருக்காக அதில் நிற்கின்றீர்கள்?. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியென்றால் நீங்கள் சுமந்திரன் அவர்களை விருந்தாளியாக அழைத்து 13 ஆம் இலக்க திருத்தச் சட்டமான இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றித்தான் பேசுவோம் என்றால் தயவுசெய்து திருமாவளவன் அண்ணா தமிழின உணர்வாளர் என்பதிலிருந்து நீங்கள் வெளியேறுங்கள். ஏன் என்றால் 13 ஆம் இலக்க திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டு தமிழின உணர்வாளர் என்பதில் அர்த்தமில்லை அண்ணா. இதனை வேதனையோடு கூறிக் கொண்டு.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒவ்வொரு அடிப்படைத் தொண்டர்களும் நீங்கள் இந்த மண் விடுதலைக்காக எவ்வளவு குரல் கொடுத்தீர்கள், எவ்வளவு போராடினீர்கள் நாங்கள் எதையும் மறக்கமாட்டோம்.

ஆனால் நேற்றைய தினம் திருமாவளவன் அண்ணா நடந்துகொண்ட விடயம் கண்டிக்கத்தக்க ஒரு விடயம். அன்று மதுரையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் தமிழீழம்தான் முடிவென்று ஒரு மணி நேரமாக பேசுகின்றீர்கள் இன்று தமிழின தேசத் துரோகிகளை உங்கள் வீட்டுக்கே அழைத்து விருந்து கொடுக்கின்றீர்கள். சுமந்திரன் என்பவர் தமிழினத்தின் படு துரோகி. தமிழ்நாட்டில கால் வைக்க விடமாட்டோம் என மாணவர் கூட்டமைப்பு போராட்டங்கள் நடத்தினார்கள். இன்றுவரைக்கும் அவர்கள் அதே தீர்மானத்தோடு இருக்கின்றார்கள்.

ஆனால் நீங்கள் அழைத்து விருந்துபசாரம் செய்கின்றீர்கள். இதில் திருமாவளவன் அண்ணா நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை சொல்ல வேணும் ஓம் நான் இப்பிடித்தான். நான் இந்திய அரசு சொல்வதைத்தான் செய்யப் போகின்றேன் அல்லது இலங்கை அரசுடன் சேர்ந்து இப்படி செய்யப் போகின்றேன் என சுமந்திரனை போன்று சொல்லிவிட்டு நீங்கள் செல்லுங்கள். ஆனால் உணர்வாளர்கள் என்று சொல்லி வேசம் போட வேண்டாம் என்பது திருமாவளவன் அண்ணாவிற்கும் வன்னியரசுக்கும் சொல்லக்கூடிய விடயம். இந்த இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அடப்படைத் தொண்டர்கள் மன்னித்துக் கொள்ளுங்கள். உங்கள் தலைவர் செய்வதை நீங்கள்தான் கேட்கவேணும். நாங்கள் தமிழீழத்திற்காகத்தான் எங்கள் இலட்ச்சக்கணக்கான மக்களை இழந்தோம், தலைவர் மற்றும் தலைவருடைய குடும்பம் எங்கே என்று இல்லை. எல்லாம் முடிந்துவிட்டது.

கால்கள் இழந்து கைகள் இழந்து இராணுவ ஆக்கிரமிப்பிற்குள்ளே நாங்கள் நிக்கிறம் தமிழீழம் என்ற கோரிக்கையாடு. திருமாவளவன் அண்ணா நீங்கள் இந்திய மத்திய அரசிடம் சொல்லக்கூடிய விடயம் அங்கு இனப் படுகொலை இடம்பெற்றது என்பதனை வலியுறுத்த வேணும். ஒரு பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேணும். தமிழீழத்திற்கான கோரிக்கையை முன்வைக்க வேணும். அதனை விடுத்து அந்த 13 ஆம் இலக்க திருத்தச் சட்டம்தான் வேணும் என்கின்ற சவாரி விளையாட்டுகள் திருமாவளவன் அண்ணா இனி நடக்காது.

தயவுசெய்து தமிழீழம் என்ற இலட்சியத்தோடு பயணிக்கிறதாக இருந்தால் நீங்கள் ஈழத்தமிழர் பிரச்சினையை கையில் எடுங்கோ இல்லை சுமந்திரன் போன்ற தமிழின துரோகிகள் மற்றும் மாற்றுக் குழுக்களுடன் கைகோர்ப்பதாக இருந்தால் இதற்குள் வராமல் அப்பிடியே செல்லுங்கள். இது வேதனையோடு பதிவிடுகின்றோம். இந்த இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அடப்படைத் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்கின்றோம்.

உங்கள் தலைவன் செய்தது பிழை. தொடர்ந்து பிழையை செய்கின்றார்.
உண்மையில் நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அண்ணா வன்னியரசு நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. ஆனால் எங்கள் தேசியத்தை பேசிக்கொண்டு நிக்காதேங்கோ. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒவ்வொரு தொண்டரகளும் என்ன முடிவு என்பதனை கேளுங்கோ.

நாங்கள் இந்த திருத்தச் சட்டத்தை இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அது முடிந்த போன விடயம். இலங்கையில் இடம்பெற்றது இனப் படுகொலை என இந்தியா ஏற்றுக்கொள்ள வேணும். வடக்கு கிழக்கு பகுதிகள் தமிழரின் தாயகம் என இந்தியா அங்கீகரிக்க வேணும். இந்த கோரிக்கை மட்டும் திருமாவளவன் அண்ணாவிற்க்கு கொடுத்தால் போதும். வேறெதுவும் தேவையில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒவ்வொரு தொண்டர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். உங்கள் தலைவரிடம் கேளுங்கள். எங்களுக்கு வேதனையளிக்கின்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர். எங்களை மீண்டும் புதைகுழிக்குள் கொல்ல வேண்டாம் என்பதனை கேட்டுக்கொள்கின்றோம். நான் மருத்துவமனையில் இருந்தும் கதைக்கமுடயாத நிலையிலும் கதைச்சுக் கொண்டிருக்கின்றேன். தயவு செய்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டரகள் மற்றும் இப்பதிவினை பார்க்கும் ஒவ்வொருவரும் இதற்கு ஒரு நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.

நன்றி, வணக்கம்.

மனித உரிமை செயல்பாட்டாளர் ம. கஜன்