கணவனை இழந்த நிலையில் காணாமல் போன தன் மகனை தேடுகின்ற தாயின் சோகக்கதை.

528

கணவனை இழந்த நிலையில் காணாமல் போன தன் மகனை தேடுகின்ற தாயின் சோகக்கதை.

தமிழர்தாயகத்தைச் சேர்ந்த மெஸ்மின் சேரன் என்பவர் மூன்று மாத கருவாக இருந்த காலத்திலே தன் தந்தையை இழந்தார். கணவனை இழந்த அந்த தாய் தன் மகனை காப்பாற்றும் நோக்குடன் ஐரோப்பா நாடு ஒன்றிற்கு செல்ல வேண்டும் என்று முயற்சியில் தாயார் இந்தியாவில் உள்ள பாண்டிச்சேரியில் வாழ்ந்துவரும் நிலையில்.

மகன் மட்டும் பிரான்சு நாட்டிற்கு வந்தடைந்தார். 2010 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்திருந்தார். இவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்திருந்தார். அதுவரையில் இவர் பிரான்சில் பொபினி (Bobigny) எனும் இடத்தில் வசித்துவந்துள்ளார்.

தந்தையின் பெயர் வில்பிறட் போடினன் (ராசா படப்பிடிப்பாளர்) தாயார் பெயர் பவுலின் ஜெயந்தி

மகனின் பெயர் மெஸ்மின் சேரன் ‘( 6ம் வட்டாரம் மயிலிட்டி)

அங்கிருந்து அவர் வேலைக்கும் சென்றுவந்துள்ளார். தனது தாயுடன் காலை, மாலை என தினமும் தொலைபேசியில் உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதே போன்று 29.07.2021. அன்றும் மாலை நேரம் வேலை முடித்து வீடு திரும்பும் போதும் தனது தாயாருடன் கதைத்திருக்கின்றார். அதன் பின் அன்று இரவு 9:30 மணியிலிருந்து இவருடைய தொலைபேசி இணைப்பு முற்றுமுழுதாக துண்டுக்கப்பட்டுள்ளது. அன்றிலிருந்து இவர் எங்கே இருக்கின்றார்?. என்ன செய்கிறார்?. இவர் இருக்கின்றாரா?. என்பது இதுவரையிலும் அறியமுடியவில்லை.

திருமணமாகி நான்கே மாதங்கள் ஆன நிலையில் தாயார் தன் கணவனை இழந்து தற்போது அவருக்கு ஆறுதலாக இருந்த அவரின் ஒரே மகனான மெஸ்மின் சேரன் என்பவரையும
காணாது மிகவும் ஆழ்ந்த துயரில் இருக்கின்றார்.
இந்த தாயார் தன் மகனை தேடித் தரும்படி தாயக உறவுகளே! உங்களை நாடி நிற்கின்றார்.

எனவே எமது பிரான்சு வாழ் உறவுகளே! இந்த தாய் தன் மகனான மெஸ்மின் சேரன் என்பவரை தேடித்தரும்படி கேட்டு நிற்கின்றார்.

எனவே யாராவது இவரை கண்டாலோ, அல்லது எங்கே வசிக்கின்றார்?என்று தெரிந்தாலோ, அல்லது அவர் பற்றிய ஏதாவது தகவல் இருந்தாலோ தயவு செய்து கீழ் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கும்படி கேட்டு நிற்கின்றோம்.

நன்றி, வணக்கம்.

பிரான்சு நாட்டில் இலகுவாக தொடர்பு கொள்ள

(0033) 7 58 08 70 84
கஜன்
அனைத்துலக மனித உரிமை சங்கம் பிரான்சு.