

இலங்கையில் சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் அடக்குமுறையில் விடுவித்துக்கொண்டு வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழீழ தனியரசை நிறுவி சுதந்திரம் பெற்ற இனமாக வாழ ஈழத்தமிழினம் கடந்த 75ஆண்டுகளுக்கு மேலாக சாத்வீக வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வந்துள்ளது.முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்கு பிறகு அது சர்வதேச நீதி கோரும் போராட்டமாகவும் பரிணமித்து இலங்கையில் தமிழினத்துக்கு சிங்களப் பேரினவாதத்தால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் இனவழிப்பை வெளிப்படுத்தி தமக்கு தீர்வாக தனித்தாயகத்தை அமைக்க கோரி நியாயப்பாடுகளை முன்வைத்துள்ளது.இந்த நிலையில் பிரான்சு குடியரசிடமும் அதன் மக்களிடமும் மக்கள் பிரதிநிதிகளிடமும் தமிழீழ தனியரசை அங்கீகரிக்க கோரி பிரான்சு அனைத்துலக மனித உரிமைச்சங்கம் ஆதரவு கோரும் பயணத்தை ஆரம்பிக்கின்றது.எதிர்வரும் 2023.05.2ம் நாள் இந்த பயணம் ஆரம்பிக்கின்றது.



இந்த நெடும்பயணத்தில் பிரான்சின் மாநிலங்களில் ஆதரவு கோரப்பட இருக்கின்றது.அத்துடன் ஈழத்தமிழினம் தனித்தாயகம் கோருவதற்கான வரலாற்று நியாயங்களையும் எடுத்துரைக்க திட்டமிடப்பட்டுள்ளது.எனவே இந்த பயணம் வெற்றிபெற பிரான்சு வாழ் புலம்பெயர் தமிழ் மக்கள் தங்கள் ஆதரவை வழங்கவும் வேண்டுகோள்விடுக்கப்படுகின்றது.











