தமிழீழ தனியரசை அங்கீகரிக்க ஆதரவு தேடும் பரப்புரை இன்று பிரான்சு Villeneuve-Saint-Georges நகர சபை முன்பு

216

இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பில் இருக்கும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தை தமிழீழ தனியரசாக அங்கீகரிக்க ஆதரகோரி பிரான்சு முழுவதுமாக ஆதரவு தேடும் அனைத்துல மனித மனித உரிமைச்சங்கத்தின் பரப்புரை பயணம் இன்று பிரான்சு Villeneuve-Saint-Georges நகரசபை முன்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன் போது கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள அரசாங்கங்களால் தமிழ் மக்களுக்கு மேல் நடத்தப்பட்டுவரும் இனவழிப்புக்கான ஆதாரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன்.அவை தொடர்பான விரிவான விளக்கங்களும் தமிழ் உணர்வு செயற்பாட்டாளர்களால் கொடுக்கப்படுகின்றது.

இதேவேளை இன்றைய இந்த பரப்புரை இடம்பெறும் இடத்துக்கு வருகை தந்த பிரான்சு Villeneuve-Saint-Georges நகர பிதா தமிழ் மக்களுக்கு மேலான அடக்குமுறைகள் இனவழிப்பு போன்ற வரலாறுகளை கேட்டறிந்துகொண்டார்.அத்துடன் நகர பிதாவிடம் அனைத்துலக மனித உரிமைச்சங்க செயற்பாட்டாளர் கஜனால் தமிழீழ தனியரசை அங்கீகரிக்க ஆதரவு கோரும் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.