தமிழீழத் தமிழர்களுக்கு நீதிகோரி இனப்படுகொலை ஆதாரங்கள் மீண்டும் ஜெனிவாவில்.

168

தமிழீழத் தமிழர்களுக்கு நீதிகோரி இனப்படுகொலை ஆதாரங்கள் மீண்டும் ஜெனிவாவில்.

ஐக்கிய நாடுகள் சபையின் 53 வது மனித உரிமை கூட்டத்தொடர் திங்கட்கிழமை அதாவது 19-06-2023 ம் திகதி அன்று ஜெனிவாவில் நடைபெற்றது.

இலங்கை சிங்கள அரசினால் தமிழீழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்புக்கு நீதிகோரி இம் முறையும் அனைத்துலக மனித உரிமைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கை அரசினால் தமிழர்கள் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனப்படுகொலையின் நிழற்பட ஆதாரங்களை ஜெனிவா முன்றலில் காட்சிப்படுத்தப்பட்டது. இதனை வெளிநாட்டினர், பொதுமக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் என அங்கு வருகைதந்த அனைவரும் பார்வையிட்டுச் சென்றனர்.

அதேவேளை கனடா பிரதமர் அவர்கள் மே மாதம் 18 ஆம் திகதி இனப்படுகொலை வாரம் என்று குறிப்பிட்டிருந்தார். இதனை இலங்கை சிங்கள அரசு மறுத்துள்ளது.

இலங்கை அரசினால் தமிழீழத் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நிழற்பட ஆதாரங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.